ஆஸ்திரேலியாவில் மாநிலத்திற்கு மாநிலம் லைசன்ஸ் பெறுவதற்கான நடைமுறைகள் வேறுபடுகின்றன.
நீங்கள் சுற்றுலாப்பயணியாகவோ அல்லது வேறு தற்காலிக விசாவிலோ ஆஸ்திரேலியாவிற்கு வந்தால் Northern Territory தவிர ஏனைய அனைத்து மாநிலங்களிலும் உங்களது வெளிநாட்டு லைசன்ஸைப் பயன்படுத்தி வாகனம் ஓட்டலாம்.
குறித்த லைசன்ஸ் ஆங்கிலம் தவிர வேறு மொழியில் இருந்தால் அதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் பெற்ற ஆங்கில மொழிபெயர்ப்பை உங்களுடன் வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை கொண்டவர் என்றால் இங்கு வந்து 3 அல்லது 6 மாதங்களுக்குள் உங்கள் வெளிநாட்டு லைசன்ஸை ஆஸ்திரேலிய லைசன்சுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதற்கான நடைமுறையும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
சில நாடுகளின் லைசன்ஸ்களை நீங்கள் எவ்வித பரீட்சைகளும் எழுதாமலே ஆஸ்திரேலிய லைசன்சுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

Source: Supplied
ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எழுத்து மற்றும் செய்முறைப் பரீட்சைகளின் பின்னரே ஆஸ்திரேலிய லைசன்ஸ் பெறுவதற்குத் தகுதி பெறுவர்.
ஆஸ்திரேலிய வீதிச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குகள் இங்கு புதிதாகக் குடியேறியவர்களுக்கு சில நேரங்களில் சவாலாக இருக்கலாம்.
அதேநேரம் ஆங்கிலத்தை தமது முதல் மொழியாகக் கொண்டிராதவர்கள் இன்னுமதிக சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.
ஆஸ்திரேலியாவில் புதிதாகக் குடியேறியவர்களுக்கு உதவவென பல்வேறு மொழிகளில் உதவிகள் கிடைக்கின்றன.
நீங்கள் எந்த மாநிலத்தில் வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்து கீழ்க்காணும் இணைப்புக்களுக்குச் சென்று மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.