பெரும்பாலும் அரச கொடுப்பனவுகளில் மட்டும் தங்கி வாழ்பவர்களில் பலர் இந்த சிக்கலை எதிர்கொள்வதாக சொல்கிறார் வீடு சம்பந்தமாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ள டஸ்மேனிய பல்கலைக்கழகப் பேராசிரியர் Keith Jacobs.
இப்படியானவர்களுக்கு உதவுவதற்கென Public housing எனப்படும் அரச உதவியுடனான வீட்டுத்திட்டம் இருக்கின்றது.
குறைந்த வருமானம் பெறுவோர், தங்குவதற்கு ஒரு இடத்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள், அல்லது அதில் சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு அரசு இதனூடாக உதவி செய்கின்றது.
அரச வீட்டுத்திட்டத்தைப் பயன்படுத்துபவர்கள் தாம் தங்குவதற்கான வாடகையைச் செலுத்துவார்கள், ஆனால் அது அவர்களது சம்பளத்தின் 25 சதவீததத்திற்கு மேல் இருக்காது.
வீடற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், குடும்பவன்முறையை எதிர்கொண்டவர்களுக்கு இந்த அரச வீட்டுத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவர்கள் அந்தந்த மாநிலத்திலுள்ள state housing authority ஊடாக இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
எனினும் அரச வீட்டுத்திட்டத்திற்கான நிதியுதவி போதியளவில் இல்லாததால் வீடுகளுக்கு பெரும் பற்றாக்குறை காணப்படுவதாக டஸ்மேனிய பல்கலைக்கழகப் பேராசிரியர் Keith Jacobs கூறுகிறார்.
நாடு முழுவதும் தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடற்று இருக்கும் அதேநேரம் ஒரு லட்சத்தி 60 ஆயிரம் குடும்பங்கள் அரச வீட்டுத்திட்டத்திட்டத்திற்காக காத்திருக்கன்றன.
ஆனால் இந்தக் காத்திருப்பு சில மாதங்கள் முதல் சில வருடங்களாகவும் அமையலாம்.
இப்படியான சந்தர்ப்பங்களில் மக்கள் சமூக அமைப்புக்களிடம் உதவியை நாடவேண்டியுள்ளது.
குறிப்பாக அகதிகளாக குடியேறிய நிலையில் சென்டர்லிங்க் கொடுப்பனவை மட்டும் நம்பி வாழும் பலர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுப்பதற்கு தமது அமைப்பு உதவுவதாகச் சொல்கிறார் Liverpool Migrant Resource Centre இன் Olivia Nguy.
அதேபோல் விக்டோரியா மாநிலத்தில் AMES அமைப்பு ஆண்டொன்றுக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிதாக குடியேறியவர்களுக்கான தங்குமிடங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு உதவுகின்றது. தானும் இங்கு புதிதாகக் குடியேறியவர் என்ற அடிப்படையில் வீட்டுப்பிரச்சினை என்பது எவ்வளவு பெரியது என்பது தனக்குத் தெரியும் எனச் சொல்கிறார் AMES Australia's Settlement Accommodation Services' team leader Joseph Youhana.
அதேநேரம் இங்கு ஏற்கனவே பல வருடங்களாக வாழ்ந்து வருபவர்களும் புதிதாக குடியேறியவர்களுக்கு உதவ முன்வர வேண்டுமென Joseph Youhana ஊக்குவிக்கிறார்.
இதேவேளை அரச வீட்டுத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வீடுகளில் பெரும்பாலானவை நகரங்களை விட்டு ஒதுக்குப்புறமாக இருப்பதால் வேலை மற்றும் பிற சேவைகளைப் பெறுவதில் பாரிய சிக்கல் இருப்பதாக டஸ்மேனிய பல்கலைக்கழகப் பேராசிரியர் Keith Jacobs. சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் வீட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமெனில் அரச வீட்டுத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரிப்பட வேண்டுமென Keith Jacobs தெரிவித்தார்.
யுரளவசயடயைn ஐளெவவைரவந ழக ர்நயடவா யனெ றுநடகயசந இன் 2014ம் ஆண்டு தரவுகளின்படி அரச வீட்டுத்திட்டத்தின் கீழ் 3 லட்சத்தி 17 ஆயிரம் யூனிட்கள் நாடு முழுவதும் உள்ள நிலையில் இதில் பெரும்பாலானவற்றில் மக்கள் வாழ்ந்து வந்தாலும் றூறல் பகுதிகளில் இன்னமும் இடம் இருப்பதாக கூறப்படுகிறது.
அரச வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு உங்கள் மாநிலங்களிலுள்ள state housing authority ஐத் தொடர்புகொள்ளவும்.
Western Australia: http://www.housing.wa.gov.au/housingoptions/rentaloptions/publichousing/Pages/default.aspx
Queensland:
Liverpool Migrant Resource Centre's multilingual hub offers different resources in several languages.
At AMES Australia clients are assisted with sourcing and securing long term accommodation in Victoria.