மாணவர் விசாவில் உள்ளவர் எத்தனை மணிநேரம் வேலை செய்யலாம்?
AAP Source: AAP
ஆஸ்திரேலியாவிற்கு வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் கல்வித்துறை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. குறிப்பாக சர்வதேச மாணவர்கள் ஆண்டொன்றுக்கு நாட்டின் பொருளாதாரத்தில் 19 பில்லியன் டொலர்கள் பங்களிப்புச் செலுத்துகின்றனர். இதற்கு காரணம் ஆஸ்திரேலிய அரசால் வழங்கப்படும் வேலை செய்வதற்கான அனுமதியுடன் கூடிய மாணவர் விசாக்கள் ஆகும்.ஆனால் இதுவே பல சர்வதேச மாணவர்களின் உழைப்பு சுரண்டலுக்குள்ளாகுவதற்கும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இதிலிருந்து மாணவர்கள் எப்படித் தப்பிக்கலாம் என்று பார்ப்போம்.
Share