உலகெங்கும் டிஜிட்டல் மயமாகிவரும் நிலையில் அதற்கு ஆஸ்திரேலியாவும் விதிவிலக்கல்ல.
கிட்டத்தட்ட நாட்டின் முக்கால்வாசி மக்கள் தமது கைத்தொலைபேசிகளை இணையப் பாவனைக்கு பயன்படுத்துமளவுக்கு தொழிநுட்ப வளர்ச்சி காணப்படுவதாக the Department of Industry, Innovation and Science தெரிவித்துள்ளது.
இந்த அதீத தொழிநுட்ப வளர்ச்சியானது இன்னும் 20 ஆண்டுகளில் தற்போது இருக்கின்ற 44 வீதமான வேலைகளை விழுங்கிவிடக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
STEM tech Source: STEM tech
இந்தப் பின்னணியில் டிஜிட்டல் மயமாகும் ஆஸ்திரேலியாவில் இருக்கப்போகின்ற வேலைவாய்ப்புக்களில் 75 வீதமானவற்றுக்கு ஸ்டெம் எனப்படும் cience, Technology, Engineering ,Mathematics ஆகியவற்றில் போதிய அறிவு இருப்பது அவசியமாவதாகச் சொல்கிறார் AIIA-The Australian Information Industry Associationஇன் தலைமை நிர்வாகி ob Fitzpatrick.
ஆனால் கவலைக்குரிய விதமாக இந்த 4 பாடங்களிலும் பங்கெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக வீழ்ச்சியடைந்துவருவதாக ob Fitzpatrickதெரிவித்தார்.
எதிர்கால வேலைகளில் பெரும்பாலானவற்றுக்கு விஞ்ஞானம், கணிதம், தொழிநுட்பம், பொறியியல் ஆகிய துறைகள் தேவைப்படும் நிலையில் இந்த விடயத்தில் ஆஸ்ரேலியாவில் ஒரு ஒழுங்கான செயற்றிட்டம் காணப்படாமை கவலையளிப்பதாக உலக பொறியியல் அமைப்புக்கள் கூட்டமைப்பின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள Dr Marlene Kanga தெரிவித்துள்ளார்.

Source: Pixabay
ஆனால் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் போதுமானளவில் இல்லாமையே இத்துறைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்குக் காரணம் என சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Dr Rachel Wilson கூறினார்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஸ்டெம் கல்வியில் ஒஸ்ரேலியா பின்தங்கியுள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் high school பாடங்களில் கணிதத்தையும் விஞ்ஞானத்தையும் மாணவர்கள் கட்டாயம் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை கொண்டுவரப்படுவது அவசியம் என்கிறார் Dr Rachel Wilson.
ஆஸ்திரேலியாவில் ஸ்டெம் துறைகளில் நிபுணணத்துவம் பெற்றவர்கள்குறைவுபடுவதால் இதற்கென வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை வரவழைக்க வேண்டிய தேவை ஏற்படுவதாகக் கூறுகிறார் AIIA-The Australian Information Industry Associationஇன் தலைமை நிர்வாகி Rob Fitzpatrick.

Future work Source: Getty Images
ஸ்டெம் கல்விக்கென அரசு 65 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் இது தொடர்பில் தூரநோக்குடன்கூடிய நீண்ட கால செயற்றிட்டமும் அவசியப்படுவதாக Dr Rachel Wilson சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தேசிய விஞ்ஞான வாரம் ஆகஸ்ட் 13 முதல் 21ம் திகதி வரை கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில் இதில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது.