65 வயதுக்கு குறைந்த நிரந்தர உடல்நலக்குறைபாட்டினால் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத நிலையில் இருக்கும் ஆஸ்திரேலிய குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிட உரிமை அல்லது வேறு சிறப்பு விசாவிலுள்ள ஒருவர் NDIS திட்டத்திற்குத் தகுதி பெறுவார்.
National Disability Insurance Agency ஆஸ்திரேலிய அரசு,மாநில அரசுக்கள் மற்றும் சமூக அமைப்புக்களுடன் சேர்ந்து இத்திட்டத்தினைச் செயற்படுத்துகின்றது.
ஆனால் பல்கலாச்சாரப்பின்னணி கொண்டவர்களும் இத்திட்டத்தினுள் முழுமையாக உள்வாங்கப்படும் வகையில் செயற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
ஆங்கில மொழிப்புலமை இல்லாமை அல்லது குறைவாக இருக்கின்றமை பல்கலாச்சாரப் பின்னணி கொண்டவர்கள் இச்சேவையைப் பெறுவதில் தடையாக இருக்கின்ற பிரதான காரணி எனச் சொல்கிறார் விக்டோரியாவில் NDIS ஐச் செயற்படுத்துதற்கென நியமிக்கப்பட்ட அமைப்புக்களில் ஒன்றான The Action on Disability within Ethnic Communities (ADEC)இன் நிர்வாகி Keith Hitchen
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய காப்புறுதித் திட்டம தொடர்பில் அதைச் செயற்படுத்தும் National Disability Insurance Agency (NDIA)உடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசலாம்.
NDIS திட்டம் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு மொழிபெயர்ப்பு சேவைகளைப் பயன்படுத்தும் அதேநேரம் வேறு யாரையாவது உதவிக்கு அழைத்துச் செல்வதன் மூலம் தெளிவாகவும் முழுமையாகவும் விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய காப்புறுதித் திட்டம் தொடர்பில் மேலதிகமாக அறிந்து கொள்வதற்கு www.ndis.gov.au என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். அல்லது 1800 800 110 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
For people with hearing or speech loss
TTY: 1800 555 677
Speak and Listen: 1800 555 727
For translation and interpreting services
TIS: 131 450
Find on Facebook/NDISAus or on Twitter @NDIS