ஒருவர் காணாமல் போகும் போது என்ன செய்ய வேண்டும்?

Missing people [Credit: Australian government]

Missing people [Credit: Australian government] Source: Missing people [Credit: Australian government]

ஆஸ்திரேலியாவில் ஒரு மணித்தியாலத்திற்குள் 4 பேர் அதாவது வருடமொன்றுக்கு 35,000 பேர் காணாமல் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது தொடர்பில் Olga Klepova ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


ஆஸ்திரேலியாவில் ஒரு மணித்தியாலத்திற்குள் 4 பேர் அதாவது வருடமொன்றுக்கு 35,000 பேர் காணாமல் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இவ்வாறு காணாமல் போகின்றவர்களில் பலர் கண்டுபிடிக்கப்பட்டாலும் இச்சம்பவத்தால் மணித்தியாலம் ஒன்றுக்கு 12 பேர் பாதிக்கப்படுவதாக காணாமல் போனோருக்கான தேசிய ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வருடத்திற்கான தேசிய காணாமல் போனோர் வாரம் ஜுலை 31-ஆகஸ்ட் 06 வரை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் யாராவது காணாமல் போனால் என்ன செய்ய வேண்டும் எங்கே உதவி பெறலாம் எனப் பார்ப்போம்.
2_missing_persons
Source: Australia government

தலைவலி காய்ச்சல் தனக்கு தனக்கு வந்தால் தெரியும் என்பது போல் நமக்கு வேண்டப்பட்டவர்கள் யாராவது காணாமல் போகும்வரை நாம் இந்த விடயம் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. Helen Cheong உம் அவரது சகோதரி சலி 2008ல் காணாமல்போகும்வரை அப்படித்தான் இருந்தார்.

யாராவது காணாமல் போகும்போது நாம் முதலில் செய்ய வேண்டியது காவல்துறையிடம் முறையிடுவது என்கிறார் காணாமல் போனோருக்கான தேசிய ஒருங்கிணைப்பு மையதைச் சேர்ந்த Rebecca Klotz

நமக்கு வேண்டப்பட்டவர்கள் யாராவது காணாமல் போகும் போது அது நம்மை உடல்நிலை ரீதியாகவும் பண ரீதியாகவும் பாதிக்கின்றது.

அதேபோல் ஒருவர் காணாமல் போகின்றபோது அதை முறைப்பாடு செய்வதில் இருக்கின்ற மொழி மற்றும் கலாச்சாரச் சிக்கல்களை காவல்துறையினர் நன்கு அறிவார்கள்.  எனவே அதற்கேற்ப அந்த விடயத்தை அவர்கள் கவனமாக கையாளுவார்கள்.

ஆனால் தமது நாட்டுப் பின்னணியை வைத்து காவல்துறையினர் தம்மை தவறாக எடை போடுவார்கள் எனப் பயந்து சிலர் முறைப்பாடு செய்யாமல் இருக்கலாம் என்கிறார் Rebecca Klotz

Helen Cheong இன் குடும்பம் ஹொங்கொங்கிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்திருந்தது. ஏனைய குடும்பங்களோடு ஒப்பிடும் போது தனது பெற்றோர் கண்டிப்பு மிக்கவர்கள் எனக் கூறுகிறார் Helen Cheong.

ஆனால் அவரது சகோதரி சலி காணாமல்போனபின்னர் Helen Cheong இன்  பெற்றோர் இந்த கடும் போக்கைக் கைவிட்டுவிட்டனர்.
Missing person
Source: Rattlenoun CC BY SA 4.0
காணாமல் போனோருக்கான தேசிய ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுககளின்படி நாட்டில் காணாமல் போகின்றவர்களில் பலர் தாம் எங்கே இருக்க விரும்புகிறோம் என்பதை வெளிப்படுத்த விரும்பாதவர்களாகவே இருக்கின்றனர்.

எனவே இப்படியான காணாமல்போதல்களைத் தடுப்பதற்கு குடும்பத்தினரிடையே நல்ல பேச்சுத்தொடர்பு இருக்க வேண்டுமென்கிறார் Helen Cheong. அதேநேரம் கடந்த 8 வருடங்களாக தனது சகோதரி சலியைத் தேடிக்கொண்டிருக்கும் Helen Cheong  என்றாவது ஒரு நாள் அவர் நிச்சயம் கிடைப்பார் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை காணாமல் போகும் ஒவ்வொருவரும் நமது சமூகத்தைச் சார்ந்தவர்கள். எனவே அப்படியான சந்தர்ப்பத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதில் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம் என ஊக்கப்படுத்துகிறார் Rebecca Klotz.

அதுமட்டுமல்லாமல் பல்கலாச்சார பின்னணி கொண்ட மக்களுக்கென காணாமல்போகின்றமை தொடர்பிலான முக்கிய விபரங்கள் அடங்கிய கையேடுகளை 14 மொழிகளில் வெளியிட்டிருப்பதாகச் சொல்கிறார் காணாமல் போனோருக்கான தேசிய ஒருங்கிணைப்பு மையதைச் சேர்ந்த Rebecca Klotz.

இது தவிர மேலதிக விபரங்களுக்கு https://www.missingpersons.gov.au/ என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். அல்லது 1800 000 634 என்ற இலக்கத்தை அழைக்கலாம். மொழிபெயர்ப்பு வசதி தேவைபடுபவர்கள் 13 14 50. என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.  




Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand