இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு குடியேறி 200 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் மற்றும் மலைய மரபுரிமை இணைந்து நுவரெலியாவில் மலையக மக்களின் வரலாற்றை நினைவு கூரும் வகையில், இம் மக்கள் இன்று எதிர்கொள்ளும் சமூக, அரசியல், கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட அடிப்படை பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கண்காட்சிகளோடு பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. "மலையகம் 200" என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வுகள் வெள்ளி தொடங்கி ஞாயிறு வரை இடம்பெற்றுள்ளன. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





