இலங்கையில் பல்வேறு பொருள் ஏற்றுமதியாகின்றன. தேயிலை இறப்பர் மற்றும் தெங்கு பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இலங்கையின் அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் பொருட்களாக இவை காணப்படுகின்றன. இதுபோல் இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பனை உற்பத்தி பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அவைகளும் ஏற்றுமதியாகின்றன.இந்த நிலையில், இலங்கையின் வட மாகாணத்திலிருந்து நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் துபாய் நாட்டிற்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது நல்ல வரவேற்புக்குள்ளாகியுள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





