SKIP TO MAIN CONTENT

மேற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் தமிழ் மொழி: எப்படி சாத்தியமானது?

Supplied
Source: Supplied

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திலுள்ள மாணவர்கள் விரைவில் தமிழ் மொழியை அரச பள்ளிக்கூடங்களில் ஒரு பாடமாக கற்கலாம் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இதுகுறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.


Published

Updated

By Renuka

Source: SBS



Skip to podcast episode content

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திலுள்ள மாணவர்கள் விரைவில் தமிழ் மொழியை அரச பள்ளிக்கூடங்களில் ஒரு பாடமாக கற்கலாம் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இதுகுறித்த விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.


மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திலுள்ள மாணவர்கள் விரைவில் தமிழ் உட்பட 3 மொழிகளை அரச பள்ளிக்கூடங்களில் ஒரு பாடமாக கற்கலாம் என்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழ், ஹிந்தி மற்றும் கொரியன் ஆகிய மொழிகளையும் பள்ளிகளில் மாணவர்கள் கற்கும்வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்கு ஆஸ்திரேலிய மாநில கல்வி மற்றும் பயிற்சிகள் தொடர்பான அமைச்சர் Sue Ellery தெரிவித்துள்ளார்.

Pre-primary முதல் ஆண்டு 12 வரையான மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இதற்கான பணி எதிர்வரும் ஜுலைமாதம் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்மொழிக்கான பாடத்திட்டம் மேற்கு ஆஸ்திரேலியாவிலேயே முற்றுமுழுதாக வடிவமைக்கப்படவுள்ளதாகவும் மாணவர்கள் 2023ம் ஆண்டிலிருந்து மேற்கு ஆஸ்திரேலிய அரசபாடசாலைகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்கமுடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now