அறிவியல் துறையில் அதி உயர் விருது பெற்ற தமிழ் பெண்மணி
Dr Madhu Bhaskaran Source: Dr Madhu Bhaskaran
துணைப்பேராசிரியர் மது பாஸ்கரன், ஆஸ்திரேலியாவில் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் அதி உயர் விருதான யுரேகா பரிசை அண்மையில் வென்றுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர், சிறந்த இளம் ஆராய்ச்சியாளருக்கான விருதை வென்றுள்ள அவர், இந்த விருதைப் பெற்ற முதல் தமிழ் பெண் என்பது மட்டுமல்ல முதல் இந்தியப் பின்னணி கொண்ட பெண் என்பதும் பெருமைக்குரிய விடயம்.டாக்டர் மது பாஸ்கரன் அவரது பணி, விஞ்ஞானத்தில் ஆர்வம் மற்றும் விஞ்ஞானத் துறையில் பெண்களின் ஈடுபாடு என்பன குறித்து, குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார்.
Share