Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

Tax Talk June 2019: வரித்தாக்கல் செய்யத் தயாரா?

TAX TALK

இந்தத் தகவலை உங்களுக்கு வழங்குவது ஆஸ்திரேலிய வரி அலுவலகம். வரித்தாக்கல் செய்வதற்கான காலப்பகுதி நெருங்குகின்ற நிலையில் அதை எப்படி சரியாகச் செய்யலாம் என்று வரி அலுவலக அதிகாரி சுஜாதா ஜெய்சங்கருடன் உரையாடுகிறார் றேனுகா.


Published

By Renuka

Source: SBS



Share this with family and friends


இந்தத் தகவலை உங்களுக்கு வழங்குவது ஆஸ்திரேலிய வரி அலுவலகம். வரித்தாக்கல் செய்வதற்கான காலப்பகுதி நெருங்குகின்ற நிலையில் அதை எப்படி சரியாகச் செய்யலாம் என்று வரி அலுவலக அதிகாரி சுஜாதா ஜெய்சங்கருடன் உரையாடுகிறார் றேனுகா.


உங்களது வரி விண்ணப்பங்களை நீங்களே தாக்கல் செய்யவிருக்கிறீர்கள் என்றால் அதனை அக்டோபர் 31ம் திகதிக்கு முன்னதாக செய்ய வேண்டும். பதிவுசெய்யப்பட்ட வரிமுகவர் ஒருவரைப் பயன்படுத்தவுள்ளீர்கள் என்றால் அக்டோபர் 31க்கு முன்னதாக அவரை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும்.

இதில் இந்தவருடம் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான மாற்றங்கள் இருக்கின்றன. சிலவேளைகளில் உங்களது முதலாளியிடமிருந்து உங்களுக்கான payment summary கிடைக்காது.

வேலை வழங்குநர்கள் தமது வரி மற்றும் சூப்பர் சம்பந்தப்பட்ட தகவல்களை வரி அலுவலகத்திற்கு அறிக்கையிடும் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும்.

சில தொழில் வழங்குநர்கள் உங்களுக்கான கொடுப்பனவை வழங்கும்போதெல்லாம் உங்களது வரி மற்றும் சூப்பர் சம்பந்தப்பட்ட தகவல்களை எமக்கு அறியத்தருவதால் வருட இறுதிக்கான payment summary-ஐ உங்களுக்குத் தரவேண்டுமென்ற கடப்பாடு அவர்களுக்கு இல்லை.

உங்களது myGov கணக்கிற்குச் சென்று ATO online சேவைகளைப் பார்வையிடுவதன் மூலம் இவ்விபரங்களை நீங்கள் பார்வையிடலாம்.

நீங்கள் ஒரு வரி முகவரைப் பயன்படுத்தினால் அவர்களிடம் இந்த விபரங்கள் இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி உங்களது வரிவிண்ணப்பத்தை pre-fill பண்ணிக்கொள்வார்கள்.

அதேபோன்று சுகாதார காப்பீட்டு நிறுவனங்களும் உங்களுக்கான தனியார் சுகாதார காப்பீட்டு அறிக்கையை அனுப்பத்தேவையில்லை. ஜுலை 20ம் திகதிக்கு முன்பாக இந்த விபரங்களையும் உங்களது ATO online சேவை ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.

ATO online சேவைகளைப் பயன்படுத்தி ஒருவர் சுயமாகவே தனது வரிவிண்ணப்பத்தைத் தாக்கல் செய்கிறார் என்றால் என்ன செய்வது?

ATO online சேவைகளைப் பயன்படுத்தி சுயமாகவே வரிவிண்ணப்பத்தைத் தாக்கல் செய்கிறீர்கள் என்றால் உங்களது விபரங்கள் அனைத்தும் 'Tax Ready' என காண்பிக்கும் வரை விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டாம்.

அதற்கு முன் தாக்கல் செய்தீர்கள் என்றால் உங்களது விபரங்களில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் அவற்றை தவறவிடும் அதேநேரம் பணம் செலுத்தவேண்டிய நிலைக்கும் தள்ளப்படலாம்.

வரிமுகவர்கள் என்ற பெயரில் போலியாக இயங்கி தவறாக வரிவிண்ணப்பங்களைத் தாக்கல் செய்கின்ற சம்பவங்களைப்பற்றி கேள்விப்படுகிறோம். இதை எவ்வாறு தவிர்ப்பது?

நீங்கள் பயன்படுத்தும் வரி முகவர் Tax Practitioners Board-இல் பதிவுசெய்யப்பட்டவரா என்பதை www.tpb.gov.au என்ற இணையத்தளத்திற்குச் சென்று அறிந்துகொள்ளலாம்.

ஆங்கிலத்தை முதல்மொழியாக கொண்டிராதவர்களுக்கான உதவிகளை வரி அலுவலகம் வழங்குகிறதா?

ato.gov.au என்ற இணையத்தளத்தின் கீழ் பகுதியில் காணப்படும் ‘Other languages’ என்ற பகுதிக்குச் சென்றால் வெவ்வேறு மொழிகளில் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

வரித்தாக்கல் தொடர்பில் உதவி தேவையென்றால்  இலவச Tax Help சேவையைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் ஆண்டொன்றுக்கு 60 ஆயிரம் டொலர்களுக்கு கீழ் வருமானம் ஈட்டுபவர் என்பதுடன் சிக்கல் இல்லாத வரிவிபரங்களைக் கொண்டவர் என்றால், வரி அலுவலகத்தினால் பயிற்றப்பட்ட தொண்டர் ஒருவர் அருகிலுள்ள சமூக நிலையத்தில் வைத்து வரிவிண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கு உங்களுக்கு உதவக்கூடும்.

சில பிரிவுகளில் Tax Help ஆங்கிலம் தவிர்ந்த வேறு மொழிகளிலும் கிடைக்கிறது. நீங்கள் வாழும் பகுதியில் Tax Help பெறுவது எப்படி என்பது தொடர்பில் அறிந்துகொள்ள 13 28 61 என்ற இலக்கத்தில் வரி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.  


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now