வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தங்களுக்கு உள்ள பொறுப்புகள் மற்றும் உரிமைகளை அறிந்திருப்பது நல்லது. ஆஸ்திரேலியாவில் வாடகைக்கு இடம் தேடுவது என்பது கடினமாகி வருகிறது. பல வாடகையாளர்கள் குறிப்பாக புதிய குடியேறிகள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
Choice, National Shelter மற்றும் the National Association of Tenant Organisations இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் 80 சதவீதமான வாடகையாளர்கள் பதற்றமாக பாதுகாப்பின்மையாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். பலரின் வாடகை ஒப்பந்தம் 12 மாதங்களுக்கு குறைவாக காணப்படுவதாக Choice நிறுவனத்தின் தலைமை நிர்வாகி Alan Kirkland கூறுகிறார்.
வாடகைக்கு இருக்கும் நான்கில் ஒருவர் தங்கள் இடத்தில் உள்ள அவசர பழுதுகளை சரி செய்ய ஒரு வாரத்திற்கு மேல் காத்திருப்பதாக சொல்லுகின்றனர். மேலும் இவ்வாறான முறைபாடுகளை செய்ய வாடகைக்கு இருப்பவர்கள் தயங்குவதாகவும் கூறுகிறார் National Shelters நிறுவனத்தை சேர்ந்த Adrian Pisarski அவர்கள்
வாடகைக்கு இருப்பவர்களுக்கான தகவல் அடங்கிய காணொளி ஒன்றை NSW Fair Trading commission வெளியிட்டுள்ளது. வாடகையாளர்கள் தங்களின் checklist பரிசோதனை பட்டியலை முதலில் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வாடகை இடத்தின் condition reportஐ செய்து தர வேண்டிய பொறுப்பு வாடகையாளருடயது அதோடு வாடகை ஒப்பந்த ஆவணத்தை நன்கு படித்து பார்த்த பின் வாடகையாளர்கள் கையொப்பம் இட வேண்டும் என்று NSW Fair Trading ஆணையாளர் Rod Stowe கூறுகிறார்
வாடகைக்கு இருப்பவர்கள் வீட்டின் உரிமையாளரிடம் முறைபாடு செய்யும் போது எழுத்தில் செய்ய வேண்டும். தங்களுக்கு அநீதி நிகழ்வதாக NSW வாடகையாளர்கள் நினைத்தால் அதனை NSW Civil and Administrative tribunalலுக்கு கொண்டு செல்லலாம். ஒழுங்காக வாடகை தராத வாடகையாளரை 14 நாட்கள் அறிவுறுத்தலில் காலி செய்ய வைக்கலாம் என்று கூறுகிறார் NSW Fair Trading ஆணையாளர் Rod Stowe
NSWல் வசிப்பவர்கள் மேலதிக விபரங்களை www.fairtrading.nsw.gov.au என்ற இணையதளத்திலும் விக்டோரியா மாநிலத்தில் வசிப்பவர்கள் www.consumer.vic.gov.au என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.