அகன்ற தமிழகம் தேவை என்ற ம.பொ.சி.
Dhamu Source: Dhamu
வடக்கே வேங்கடத்தையும் - தெற்கே ஈழத்தையும் எல்லைகளாகக் கொண்டு, ஒரு புதிய தமிழகம் உருவாக வேண்டுமென, 1940-களிலேயே குரல் கொடுத்தவர், மா.பொ.சி. என்கிற மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் அவர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வா.உ.சி ஆகியோரது தியாகத்தையும், வீரத்தையும், மறந்திருந்த தமிழர்களுக்கு மீண்டும் நினைவுறுத்தியவர். மா.பொ.சி. அவர்கள் ஒரு சர்ச்சைக்குரிய தலைவர்; பன்முக அடையாளம் கொண்ட அரசியல் ஆளுமை. ம.பொ.சி. குறித்த இன்றைய தமிழ்த் தடம் நிகழ்ச்சியை வழங்குகிறார், முனைவர் தாமு.
Share



