NSW மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையில் செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்ற முன்னணி தொழிலாளர்கள் அதிக பயனடைபவர்களாக இருப்பார்கள். அரசியல்வாதிகளின் ஊதிய உயர்வை முடக்குவது, வாரகம்பா அணைச் சுவரை உயர்த்துவதைக் கைவிடுவது மற்றும் mining royalties - சுரங்க ஆதாய உரிமம்களை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் 13 பில்லியன் டாலர் மதிப்பிலான சேமிப்பை அரசு அறிவித்துள்ளது. இந்நிதிநிலை அறிக்கை மூலம் வேறு யாரெல்லாம் பயனடையவுள்ளனர்? அலசுகிறார் சிட்னியில் நிதி தொடர்பிலான உயர் பதவி வகித்துவரும் ரவி பானுதேவன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




