தோட்டங்களில் வேலை செய்வதற்கென்று தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு 200 வருடங்களாகின்றன. இலங்கை மலையக மக்களின் வரலாற்றையும், இன்றைய யதார்த்தையும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட ‘‘தோட்டக்காட்டீ” என்ற கவிதை தொகுப்பை எழுதிய இரா வினோத் அவர்களுடன் ஒரு உரையாடல் நடத்துகிறார் குலசேகரம் சஞ்சயன்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் ஒலிபரப்பப்பட்ட இந் நிகழ்ச்சியில் வரும் கவிதைகளை வாசித்தவர்கள் நிலா மற்றும் சிறீபாலன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





