போரினாலும் பிற இடர்களினாலும் நலிவுற்றுள்ள இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் UNSW - NSW பல்கலைக்கழக மாணவர்களின் 'அஞ்சலி' தமிழ்ச் சங்கம் 'ஒலி - ஒளி 2017' எனும் நிகழ்ச்சியினை நடத்தவுள்ளனர். அதில் 'The Aunty Network' எனும் இசை நாடகம் ஒன்று அரங்கேறவுள்ளது. நடைபெற்றவுள்ள தமது கலை நிகழ்ச்சி மற்றும் தமது உதவித் திட்டங்கள் பற்றி அஞ்சலி தமிழ்ச் சங்கத்தின் மாதுமை கோணேஸ்வரன், பிரகதீஸ் சோதிலிங்கம் ஆகியோர் மகேஸ்வரன் பிரபாகரனுடன் உரையாடுகின்றனர். UNSW Science Theatre இல் March மாதம் 17ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7:30க்கும், March மாதம் 18ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கும் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலதிக விவரங்களுக்கும் நுழைவுச்சீட்டுகளுக்கும்: Mithra on 0415219243 or mithra407@gmail.com