A piece of cake — நீங்கள் இதை முன்பே கேள்விப்பட்டிருக்கலாம். உண்மையில், 'A piece of cake' என்பது ஒரு கேக் துண்டு - இனிப்பு, மென்மையானது, சாப்பிட எளிதானது.
இன்று, நீங்கள் எல்லா வகையான சூழ்நிலைகளிலும் இதைக் கேட்பீர்கள்.
முக்கியமாக ஒருவருக்கு பதிலளிக்கும் போது. நான் உங்களிடம் ஒரு சாண்ட்விச் செய்து தரச் சொன்னேன் என்று வைத்துக்கொள்வோம்.
அது உங்களுக்கு மிகவும் எளிதாக இருந்தால், நீங்கள் இவ்வாறு பதிலளிக்கலாம்:
- Sure. It’s a piece of cake.
அன்றாட பணிகளைப் பற்றி பேசும்போது இந்த சொற்றொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்:
- Folding laundry? Honestly, piece of cake for me, but my brother finds it more difficult!
நீங்கள் இதை வேலை அல்லது பாடசாலையிலும் பயன்படுத்தலாம்:
- That quiz last week? Oh, total piece of cake. I got every question right.
ஏதாவது எளிதானது என்று ஒருவரை ஊக்குவிக்க அல்லது உறுதியளிக்க இதைப் பயன்படுத்தவும்:
- Go on, try it, you’ll see, it’s a piece of cake!
சவாலான சூழ்நிலைகளில் ஏதாவது கடினமாக இல்லை என்பதைக் காட்ட இதைப் பயன்படுத்தவும்:
- Climbing that hill? Piece of cake!
நீங்கள் இதைப் பயன்படுத்தி உண்மையில்லாத ஆனால் எளிதான அல்லது எளிமையான விடயங்களை விவரிக்கலாம்:
- Solving mysteries? He makes it look like a piece of cake.
ஆங்கிலத்தில் Josipa Kosanovic தயாரித்த நிகழ்ச்சியை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


