“விஜயேந்திரர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” - அகில பாரத அனுமன் சேனா

Source: Raj
சென்னையில் தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நடைபெற்றபோது காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் அவர்கள் மட்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது இருக்கையில் அமர்ந்திருந்தார். ஆனால், நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப்பண் இசைக்கப்பட்ட போது, விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வு தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக விஜயேந்திரர் சுவாமிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனாவின் மாநில பொதுச் செயலாளர் இராமபூபதி அவர்கள் சென்னை காவல்துறை ஆய்வாளரிடம் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக இராமபூபதி அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
Share


