‘To Shout’என்பது மிகச் சத்தமாக ஏதாவது சொல்லுவது என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
பல காரணங்களுக்காக நாம் சத்தமாக கத்தலாம் அல்லது அலறலாம் கோபம், விரக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தவும், அல்லது யாருக்காவது எச்சரிக்கை செய்யவும் நீங்கள் சத்தமாக கத்தலாம்:
- The teacher shouted to quieten the class.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, ஆச்சரியப்படும்போது அல்லது உங்கள் விளையாட்டு அணியை ஆதரிக்க விரும்பும்போது கத்தலாம்:
- I shouted when my team scored the winning goal!
ஆனால் ‘To Shout’ என்பதற்கு வேறு அர்த்தங்களும் இருக்கிறது. உதாரணமாக, வேறொருவரின் பானம் அல்லது உணவுக்கு பணம் செலுத்துவதையும் ‘shout’ என்று சொல்லலாம்.
- I’ll shout you a coffee.
- After the game, I shouted my mate a drinks.
அல்லது, ஏதாவது ஒரு விடயம் பலமான தாக்கத்தை ஏற்படுத்தும் போது:
- Her dress really shouts confidence.
சில நேரங்களில், யாருக்காவது தொலைபேசி அழைப்பு எடுப்பதையும் ‘shout’ என்று சொல்வார்கள்.
- I’ll give you a shout later when I’m free.
வானொலியில், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேட்டுக்கொண்டிருக்கும் நேயருக்கு ‘shout out’ வாழ்த்து/நன்றி தெரிவிப்பு செய்வதை நீங்கள் கேட்டிருக்கலாம்— அந்த நேயருக்கு பிறந்தநாளாக இருக்கலாம், அல்லது அவர்கள் தங்களது நிகழ்ச்சியை ஆதரித்ததற்காக நன்றி தெரிவிப்பதற்காகவும் இருக்கலாம்.
ஆங்கிலத்தில் Josipa Kosanovic தயாரித்த நிகழ்ச்சியை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



