ஆஸ்திரேலியாவில் உள்ள நுகர்வோர் உத்திரவாத சட்டத்தினால் நுகர்வோரின் உரிமைகள் காக்கப்படுகின்றன. இதனால் நுகர்வோர் தங்களின் பணத்தினையும் சேமிக்கமுடியும். கார் போன்ற பொருள் வாங்கும் போதும் கூட Jing Wang போன்று வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைய கூடும். Jing Wang வாங்கிய புதிய காரின் இயந்திரம் வாங்கிய 3 வாரங்களில் பழுதாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சமீபத்தில் குடிபெயர்ந்தவர்கள் தங்களின் நுகர்வோர் உரிமைகள் தெரியாமல் பொருட்களை வாங்கி பாதிப்புக்குள்ளாவதாகவும் இவர்களை குறி வைத்தே சில நேர்மையற்ற வணிகங்கள் தங்களின் பொருட்களை விற்பனை செய்வதாக Melbourneல் உள்ள சமூக சட்ட ஆலோசனை மையமான Westjusticeன் நிர்வாக இயக்குனர் Denis Nelthorpe தெரிவித்தார்.

Source: AAP
புதிதாக ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களின் குறைந்த ஆங்கில புலமை மற்றும் வாங்கும் பொருட்கள் பற்றிய தகவல்கள் அவர்களின் தாய்மொழியில் இல்லாததும் இவர்கள் இலகுவாக ஏமாற்றம் அடைய காரணமாகிறது என்று தெரிவித்தார் Liverpool Migrant Resource Centreஐ சேர்ந்த Olivia Nguy.
ஆஸ்திரேலியா நுகர்வோர் சட்டத்தின் கீழ் வணிகங்கள் தாங்கள் விற்கும் பொருட்களின் தரத்திற்கு கட்டாயம் உத்திரவாதம் வழங்கிட வேண்டும். $40,000ற்கு கீழ் பெறுமதிமிக்க அனைத்து பொருட்கள் மற்றும் அதற்கு மேல் பெறுமதியான தனிப்பட்ட அல்லது வீட்டுபாவனை பொருட்களுக்கு உத்திரவாதங்கள் வழங்கப்பட வேண்டும். வாங்கும் பொருட்கள் நீடித்த, பாதுகாப்பான, பழுதுகளற்றவைகளாக இருக்க வேண்டும். உத்திரவாத காலம் முடிவதற்குள் வாங்கிய பொருட்கள் பழுதடைந்து விட்டால் அவைகள் கரிசனைகளுடன் பழுது பார்த்து தரப்பட வேண்டும். இவ்வாறு ஆஸ்திரேலியா நுகர்வோர் சட்டத்தின் கீழ் நியாயமான வர்த்தகத்தை ஊக்குவிக்கின்றது The Australian Competition and Consumer Commission ஆஸ்திரேலியா நுகர்வோர் ஆணையம் ACCC.

Source: AAP
நேர்மையற்ற வர்த்தகர்கள் மீது முறைபாடு செய்ய முதலில் வாடிக்கையாளர் வர்த்தகரை தொடர்பு கொண்டு அவர்களிடம் வாங்கிய பொருள் குறித்த பழுதுகளை விளக்க வேண்டும். அதற்கு அவர்கள் செவிசாய்க்காவிட்டால் ACCC இணையதளத்தில் உள்ள நுகர்வோர் உத்திரவாத தகவல்களை காட்டி நியாயம் கேட்கலாம். அப்போதும் உங்களின் முறைப்பாடு தீர்க்கப்படாவிட்டால் வர்த்தகரை பற்றி Local Fair Trading Agencyல் புகார் அளிக்கலாம். அவர்கள் ஏற்க மறுத்தால் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கலாம். இறுதியாக ACCCயிடம் முறையாக புகாரை சமர்ப்பிக்கலாம்.
ஆனால் இவைகள் அனைத்தையும் தவிர்க்க நுகர்வோர் சட்டம் குறித்து புதிய குடியேறிகளுக்கு கற்பிப்பதே நல்லது என்று தெரிவித்தார் Denis Nelthorpe.