Negative gearing என்பது பொதுவாக முதலீட்டு பண்புகளுடன் தொடர்புடைய ஒரு சொல். ஒருவருடைய investment property- முதலீட்டுச் சொத்தின் செலவுகள் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை விட அதிகமாக இருக்கும்போது இது நிகழ்கிறது.
மறுபுறம், கடன் வட்டி உட்பட சொத்துடன் தொடர்புடைய அனைத்து செலவுகளையும் ஈடுகட்டுமளவுக்கு வாடகை வருமானம் போதுமானதாக இருக்கும் போது positive gearingஆக இது மாறும்.
Negative gearing முதலீட்டுச் சொத்துக்களை வைத்திருக்கும் ஆஸ்திரேலியர்களுக்கான ஒரு வழிமுறை எனவும், அவர்களின் வரிக்கு உட்பட்ட வருமானத்திற்கு எதிராக முதலீட்டுச் சொத்து தொடர்பிலான செலவுகளை ஈடுசெய்ய அனுமதிக்கிறது எனவும் விளக்குகிறார் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய property developerகளில் ஒருவரான Intrapac Property தலைமை இயக்க அதிகாரி Maxwell Shifman.
ஆஸ்திரேலிய வரிச் சட்டத்தின் கீழ், தமது சொத்தை வாடகைக்கு விட்டிருந்தால் தங்கள் வங்கிக் கடன் வட்டியை tax deductionஇல் முதலீட்டாளர்கள் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் அவர் கூறுகிறார்.

Negative gearing என்பது ஆஸ்திரேலியாவில் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறையாகும், மேலும் முதலீடு தொடர்பான அனைத்தையும் போலவே, இதிலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன.
தற்போதுள்ள Negative gearing பொறிமுறை சிலருக்கு ஒரு பயனுள்ள வரி உத்தியாக தற்போது அமைகின்றது.
இருப்பினும் Negative gearing என்பது tax reduction ஐக் காட்டிலும் முதலீடு அல்லது வரி ஒத்திவைப்பு ஆகும் என்கிறார் Maxwell Shifman.
Negative gearingக்கு ஆதரவான வாதங்கள் பல உள்ளன.
முதலாவதாக, நில உரிமையாளர்கள் தங்கள் வரிக்குட்பட்ட வருமானத்தைக் குறைக்க அனுமதிப்பதன் மூலம் வாடகைச் செலவுகளைக் குறைக்கலாம்.
இரண்டாவதாக, கிடைக்கும் வரிச் சலுகைகள் காரணமாக, Negative gearing செய்யப்பட்ட சொத்துக்களில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களை ஈர்ப்பதால் இது வீட்டுவசதியின் மதிப்பை அதிகரிக்கலாம்,
Negative gearingஐப் பயன்படுத்துவதன் ஊடாக மக்கள் சொத்துக்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுவதால் வாடகைச் சந்தையில் அதிக வீடுகள் கிடைக்கின்றன என்கிறார் Financial Servicesஇன் குழு நிர்வாகி Stephen Mickenberger.

இதேவேளை Negative gearing என்பது சில ஆண்டுகளாக அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வருகிறது.
2019 பெடரல் தேர்தலின் போது, லேபர் கட்சியின் Bill Shorten, சமூக சமத்துவமின்மை குறித்த கவலைகளை சுட்டிக்காட்டி, முதலீட்டு சொத்துக்களுக்கு Negative gearing ஊடாக கிடைக்கும் வரிச் சலுகைகளை கட்டுப்படுத்தப்போவதாக உறுதியளித்திருந்தார்.
இருப்பினும், 2022ம் ஆண்டு தேர்தலின்போது பிரதமர் Anthony Albanese தற்போதைய Negative gearing கொள்கைக்கான தனது ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டார்.
மறுபுறம், லிபரல் கட்சி Negative gearing கொள்கைக்கு ஆதரவாக உள்ளது.
Negative gearing ரத்து செய்யப்பட்டால், முதலீட்டுச் சொத்துக்கான கேள்வி குறையும் எனவும், இதனால் வாடகைச் சந்தையில் வீடுகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

எதிர்காலத்தில் சொத்தை விற்கும் போது முதலீட்டாளர்கள் மூலதன ஆதாயங்களிலிருந்து சாத்தியமான லாபம் ஈட்டக்கூடிய ஒரு வர்த்தக பரிமாற்றமே Negative gearing என்று கூறுகிறார் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் Master of Property degree திட்ட இயக்குநராக உள்ள Peter Koulizos.
ஒரு முதலீட்டுச் சொத்தை வைத்திருக்கும் ஆரம்ப ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் இழப்பை சந்திப்பது பொதுவானது என்கிறார் அவர்.
வீடுகளை சொந்தமாக வைத்திருப்பதன் மூலமும், முதலீட்டு சொத்துக்களை வைத்திருப்பதன் மூலமும், முதலீட்டாளர்கள் தமக்கான நீண்ட கால செல்வத்தை உருவாக்கலாம் எனவும், அரச ஓய்வூதியங்கள் மற்றும் முதுமைக்கால ஆதரவை நம்புவதை குறைக்கலாம் எனவும் Peter Koulizos சுட்டிக்காட்டுகிறார்.
ஆஸ்திரேலிய நிதியாண்டு ஜூன் 30 அன்று முடிவடைந்துவிட்டதால், முந்தைய நிதியாண்டிற்கான வரி அறிக்கைகள் ஜூலை 1 முதல் அக்டோபர் 31 க்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




