AUSTRALIA-வில் உள்ள CSIRO - Commonwealth Scientific and Industrial Research Organisation என்ற ஆராய்ச்சி அமைப்பும் Competitive Foods Australia என்ற தனியார் அமைப்பும் சேர்ந்து V2-FOOD என்ற நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.
Plant Based Meat என்பதை அப்படியே மொழி பெயர்த்து தாவர இறைச்சி என்று சொல்லலாம். அதாவது வெறும் தாவர பொருட்களை மாத்திரம் வைத்து, பார்ப்பதிலும், ருசியிலும் இறைச்சி போல் உள்ள உணவுவகைகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
தற்காலத்தில் பலர் VEGETARIAN என்றும் VEGAN என்றும் தங்களது உணவு பழக்கத்தை கொண்டுள்ளார்கள். VEGETARIAN என்றால் மாமிசம் சாப்பிடுவதில்லை. மற்ற படி அவர்கள் முட்டை, பால், தயிர், சீஸ் போன்றவற்றை சாப்பிடுகிறார்கள். ஆனால் VEGAN உணவு பழக்கம் உள்ளவர்கள் பிராணிகளில் இருந்து வந்த எந்த ஒரு பொருளையும் உட்கொள்வதில்லை. மாட்டு பாலுக்கு பதிலாக அவர்கள் SOYA-வில் இருந்து கிடைக்கும் பால் அல்லது ALMOND விதையில் இருந்து கிடைக்கும் பால் போன்றவற்றை உட்கொள்கிறார்கள்.
மாமிசம் சாப்பிடுவதால் பல நோய்கள் வர வாய்ப்புகள் அதிகமாகிறது என்றும், ஒரு பிராணியை கொன்று அதை உணவாக சாப்பிடக்கூடாது என்றும் தற்காலத்தில் இன்னும் சிலர் யோசிக்கிறார்கள். ஆக அவர்கள் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்த விரும்புகிறார்கள். மாமிசத்தை விட்டபிறகு அவர்களுக்கு உணவாக கிடைப்பது VEGETARIAN அல்லது VEGAN உணவு மாத்திரமே. அவர்களின் தேவையை கொண்டுதான் இந்த தாவர உணவுகள் இப்பொழுது உற்பத்தி செய்யப் படுகின்றன.
இந்த PLANT BASED MEAT- ஐ தயாரிக்க அடிப்படை காரணம் என்ன?
காலங்காலமாக மக்கள் வெறும் தாவர உணவுகளை மாத்திரமே VEGETARIAN சாப்பிட்டு எந்த விதமான நோய் நொடிகள் இல்லாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதே மாதிரி மாமிச உணவுகளை மாத்திரமே சாப்பிட்டுவருபவர்களும் நல்ல ஆரோக்கியமாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் அதிகமாக (RED MEAT) சிகப்பு இறைச்சி, மற்றும் அதிகமாக இராசயனங்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட இறைச்சி (PROCESSED MEAT) சாப்பிடுபவர்களுக்கு புற்று நோய், இருதய நோய், மற்றும் உடல் பருமன், நீரழிவு போன்ற பாதிப்புக்கள் வர அதிக வாய்ப்புகள் உள்ளன என்று பல ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளன. எனவே பலர் மாமிச உணவில் இருந்து மாறி தாவர உணவுக்கு வர விரும்புகிறார்கள்.
இருந்தாலும் இந்த உணவில் மாத்திரமே அந்த சத்து உள்ளது, அந்த உணவில் மாத்திரமே இந்த சத்து உள்ளது என்றும் சொல்ல முடியாது. இறைச்சியில் புரோட்டீன் சத்து இருப்பது போல், பருப்பு வகைகளில் புரோட்டீன் சத்து இருக்கிறது.
அப்படி இருக்கையில் ஒருவருக்கு ஒருவகையான உணவு மாத்திரமே பிடித்திருக்கிறது, அதற்கு அவரவர் இருக்கும் சுற்றுப்புற சூழ்நிலை, கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகள் ஒரு காரணமாக இருக்கிறது. இந்த மாதிரி பழக்க வழக்கங்களில் ஊறிப்போன நாம், வேறு ஒரு உணவை விரும்புவதற்கும், விரும்பாததற்கும் ஒரு முக்கிய காரணம் அந்த உணவின் ருசி தான்.
அதனால் தான் உணவு நிறுவனங்கள் உப்பை அதிகமாக்கியும் இனிப்பை அதிகமாக்கியும் நமக்கு பிடிக்கும் வகையில் உணவுகளை தயாரிக்கின்றன. இந்த ஒரே அடிப்படையில்தான் தாவர இறைச்சியும் உற்பத்தி செய்யப்படுகிறது.
தாவர இறைச்சி என்பது தாவர உணவுதான் என்று இருக்கையில் பலர் VEGETARIAN அல்லது VEGAN உணவுகளை சாப்பிடத்தானே செய்கிறார்கள். பிறகு அந்த உணவு வகைகளுக்கும் இந்த தாவர இறைச்சி என்ற உணவுக்கும் என்ன வித்தியாசம்?
முன்பு சொன்னது போல் தற்பொழுது மாமிசம் சாப்பிடும் சிலருக்கு அந்த பழக்கத்தை விட்டு வெறும் தாவர உணவுகளை மாத்திரமே சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் அவர்களால் அந்த மாதிரி உடனடியாக மாற முடிவதில்லை.
உதாரணமாக எப்பொழுதும் BEEF BURGER சாப்பிட்டு பழக்கம் உள்ள ஒருவரிடம் ஒரு VEGETABLE BURGER ஒன்றை கொடுத்தால் அதை சாப்பிட அவர் மிகவும் கஷ்டப்படுவார். காரணம் அந்த VEGETABLE BURGER-ல் உண்மையான மாமிசத்தின் ருசி இருப்பதில்லை.
இவர்களின் தேவையை பூர்த்தி செய்யத்தான் இந்த PLANT BASED MEAT என்பது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தாவர இறைச்சியை வைத்து BURGER செய்து அதை BEEF BURGER சாப்பிடும் பழக்கம் உள்ள ஒருவரிடம் கொடுத்தால், அவருக்கு அது ஒரு VEGETARIAN BURGER என்றே தெரியாது. அதற்கு காரணம் அந்த தாவர இறைச்சி BURGER-ல் உள்ள ருசியும் மணமும் ஒரு BEEF BURGER-ஐ சாப்பிட்டது போலவே இருக்கும்
இந்த தாவர இறைச்சி-ல் இருக்கும் முக்கிய பொருட்கள் (INGREDIENTS) என்ன?
இதில் முக்கியமாக இருப்பது புரோட்டின் சத்துக்கள் உள்ள பருப்பு வகைகள் தான். மற்றும், சோயா, கோதுமை, சோளம், அரிசி, VEGETABLE OIL என்று பலவிதமான தாவரங்கள் சேர்க்கப்படுகிறது. இரத்தம் போல் நிறம் வருவதற்காக பீட்ரூட் -ம் சேர்க்கிறார்கள்
அதை தவிர இறைச்சி போல் மணமும் ருசியும் கொடுக்க பல ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. முக்கியமாக சோடியம் சேர்க்கப்படுகிறது.
இந்த மாதிரி பலவிதமான இராசயனங்களை சேர்ப்பதினால் அதற்கு இயற்கையான மாமிசம் போல் தோற்றமும், ருசியும் கிடைக்கிறது. மேலும் இந்த தாவர இறைச்சியை BBQ சமையல் செய்யும்போது அதில் இரத்தம் மாதிரி திரவம் வரும்படியும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் .
கடைகளில் பார்த்தால், இந்த தாவர இறைச்சி மற்ற மாமிசங்கள் இருக்கும் இடத்தில் தான் வைத்திருக்கிறார்கள். ஆக தாவர இறைச்சியை வாங்குபவருக்கு அவர் தான் ஒரு மாமிசத்தை தான் வாங்குகிறோம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
இந்த தாவர இறைச்சியால் (ENVIRONMENT) சுற்றுப்புற சூழ்நிலைக்கும் நல்லது என்று சொல்கிறார்கள். அது சரியா?
தற்பொழுது காலநிலை மாற்றங்கள் பற்றி பலவிதமான ஆராச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றில் இந்த மாதிரி மாமிசத்துக்காக வளர்க்கப்படும் பிராணிகளால் GREENHOUSE GASES அதிகப்படியாக உருவாகிறது என்றும் கணித்துள்ளார்கள்.
மேலும் இந்த பிராணிகளை வளர்ப்பதற்காக அதிகப்படியாக நிலப்பரப்பும், நீரும் தேவைப்படுகிறது என்றும் கணித்துள்ளார்கள்.
இவற்றை எல்லாம் கணக்கு போட்டு ஒரு தாவர இறைச்சி BURGER உருவாக்க செலவாகும் நீரும், உபயோகப்படுத்தப்படும் நிலமும் பல மாமிச BURGER-க்கு சமம் என்றும் சிலர் கணித்துள்ளார்கள்.
ஆக, மாமிசம் சாப்பிடுவதற்கு பதிலாக தாவர இறைச்சிக்கு மாறினால் இந்த கால நிலை மாற்றங்களை குறைக்கலாம் என்பது இந்த ஆராச்சியாளர்களின் கருத்து.
தாவர இறைச்சி உடம்பு ஆரோக்கியத்துக்கு நல்லதா?
இந்த தாவர இறைச்சியில் (CHOLESTROL) கொழுப்பு கிடையாது. இதில் உள்ள (CALORIES) சக்தி மாமிச உணவில் இருக்கும் அளவிலேயே இருக்கிறது. ஆனால் மாமிசத்தில் (FIBRE ) நார் இருப்பதில்லை. தாவரங்களில் அது அதிகமாக இருக்கிறது.
ஆனால் நாம் முக்கியமாக பார்க்கவேண்டியது, இது ஒரு இராசயன முறையில் தயாரிக்கப்பட்ட உணவு. உணவில் மணமும், ருசியும் செயற்கையான முறையில் கொடுப்பதற்காக பல விதமான இராசயனங்கள் சேர்க்கப்படுகின்றன. முக்கியமாக சோடியம் என்ற இராசயனம் அதிகப்படியாக சேர்க்கப்படலாம்.
ஆக மாமிச உணவை சாப்பிடுவதற்கு பதிலாக தாவர இறைச்சி உணவை சாப்பிட்டால் அது உடம்பின் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று உறுதியாக சொல்ல முடியாது.
வேறு எந்த மாதிரியான உணவுகளையும் சேர்த்து சாப்பிடுகிறோம், ஒவ்வொன்றையும் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்தே உடம்பின் ஆரோக்கியம் அமைகிறது.




