“வீடு” என்ற உணர்வு – A sense of viidu, புலம் பெயர்ந்த தமிழர்களால் எப்படி மீள் உருவாக்கப்படுகிறது என்பதை வெவ்வேறு கண்ணோட்டங்களில் இந்த புத்தகம் முன்வைக்கிறது – நாட்டிலிருந்து வெளியேறுவது என்றால் என்ன? உயிருக்குத் தப்பியோடுவது என்றால் என்ன? புதிய சூழலில் தமது “வீடு” என்ற உணர்வு எப்படி கட்டமைக்கப்படுகிறது? என்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் இந்த நூலில் கட்டுரை எழுதியவரும், இந்த நூலைத் தொகுத்தவர்களில் ஒருவருமான முனைவர் நிரோ கந்தசாமி அவர்களுடன், இந்த நூல் குறித்தும் அவரது பணிகள் குறித்தும் , குலசேகரம் சஞ்சயன் பேசுகிறார்.
உறவு உள்ளவரைதான் “வீடு” உள்ளதா?

Dr. Niro Kandasamy (right), and the cover of the Book, "A Sense of Viidu" she edited. Source: SBS Tamil
புலம்பெயர்ந்த தமிழர் பற்றிய ஒரு புத்தகம் – உண்மையில், இலங்கைத் தீவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்த தமிழர்கள் பற்றிய ஆராய்ச்சியின் முதல் தொகுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Share