SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவை உண்மையில் யார் நடத்துகிறார்கள், அதில் உங்கள் பங்கு என்ன?

[JPG]_How-Australia-Works_Ep1.jpg
Artwork and Design: Francisco Ortiz Lozano and Yudai Urushima

தொழில் ஒன்றைத் தொடங்குவதற்கான வணிக அனுமதி, வாடகை பிரச்சனை அல்லது குடும்ப ஆதரவு என்பனவற்றுக்கு யார் உங்களுக்கு உதவ முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? Fedel, Carol, மற்றும் அபீரின் கதைகள் மூலம், ஆஸ்திரேலியாவின் மூன்று நிலை அரசுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உள்ளூர், மாநிலம் அல்லது பிரதேசம் மற்றும் ஃபெடரல் அரசுகள் எதற்குப் பொறுப்பு மற்றும் உதவிக்கு எங்கு திரும்புவது என்பதைக் கண்டறியவும்.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Presented by L-FRESH The LION

Source: SBS



Skip to podcast episode content

தொழில் ஒன்றைத் தொடங்குவதற்கான வணிக அனுமதி, வாடகை பிரச்சனை அல்லது குடும்ப ஆதரவு என்பனவற்றுக்கு யார் உங்களுக்கு உதவ முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? Fedel, Carol, மற்றும் அபீரின் கதைகள் மூலம், ஆஸ்திரேலியாவின் மூன்று நிலை அரசுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உள்ளூர், மாநிலம் அல்லது பிரதேசம் மற்றும் ஃபெடரல் அரசுகள் எதற்குப் பொறுப்பு மற்றும் உதவிக்கு எங்கு திரும்புவது என்பதைக் கண்டறியவும்.


How Australia Works தொடரின் முதல் பாகத்தில், Fedel ஒரு தொழிலைத் தொடங்க விரும்புகிறார், Carol ஒரு வாடகை தகராறைத் தீர்க்க முயற்சிக்கிறார், மேலும் அபீருக்கு தனது குடும்பத்தைப் பராமரிப்பதற்கு ஆதரவு தேவை. ஆஸ்திரேலியாவின் மூன்று நிலை அரசுகள் உங்கள் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதையும், யார் எதற்குப் பொறுப்பு என்பதையும் அறிவது சரியான ஆதரவைக் கண்டறிய உதவும் என்பதையும் விளக்க அவர்களின் கதைகள் உதவுகின்றன.

How Australia Works 60 மொழிகளில் கிடைக்கிறது. இத்தொடரை மற்ற மொழிகளிலும் கேட்டுப் பாருங்கள்.


பங்களித்தவர்கள்:

'How Australia Works' என்பது SBS Audio மற்றும் Australia Explained ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவான ஒரு வலையொலி ஆகும்.

தொகுப்பாளர்: (ஆங்கிலத்தில்) L-FRESH The LION, (தமிழில்) குலசேகரம் சஞ்சயன்

ஆராய்ச்சி மற்றும் இதழியல்: Gonzalo Aguirregomezcorta

ஒலி வடிவமைப்பு, ஒலி கலவை, அசல் இசை மற்றும் கருப்பொருள் இசை: L-FRESH The LION

சட்டம் மற்றும் குடிமைசார் ஆலோசகர்: Dr Jacinta Sassine (School of Law, Western Sydney University)

கலை மற்றும் வடிவமைப்பு: Francesco Ortiz மற்றும் Yudai Urushima

எழுத்து: Josipa Kosanovic மற்றும் Susan Burchill

உருவாக்கம் மற்றும் தயாரிப்பு: Josipa Kosanovic

ஆசிரியர், Australia Explained: Roza Germian

கல்வி மற்றும் அத்தியாவசிய சேவைகள் பிரிவுத் தலைவர், SBS Audio: Janine Googan

இந்த வலையொலி தயாரிக்கப்படும் மற்றும் கேட்கப்படும், நாடு முழுவதிலுமுள்ள நிலங்களின் பாரம்பரியக் காவலர்களை நாங்கள் அங்கீகரிக்கிறோம். கடந்த கால மற்றும் தற்போதைய மூத்த குடிமக்களுக்கு (Elders) எங்கள் மரியாதையைச் செலுத்துவதுடன், பூர்வீகக்குடியின மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களை (Aboriginal and Torres Strait Islander peoples) இக்கண்டத்தின் பூர்வீக மக்களாக அங்கீகரிக்கிறோம்.

நாடாளுமன்றம் குறித்த பகுதிகள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன. பதிப்புரிமை: Commonwealth of Australia. Creative Commons உரிமத்தின் கீழ், பொருந்தக்கூடிய உரிம விதிமுறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now