ஆஸ்திரேலிய அரசு, சட்டங்கள் மற்றும் பொதுச் சேவைகள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? உண்மையான கதைகள் மூலம், உங்களுக்குத் தகவல்களும் ஆதரவும் தேவைப்படும்போது எங்கு தொடங்க வேண்டும் என்பதையும், ஒரு முடிவை எவ்வாறு கேள்விக்குட்படுத்தலாம் என்பதையும் இத்தொடருக்கான அறிமுகப் பகுதி விளக்குகிறது.
‘How Australia Works’ என்பது, குடிவந்துள்ள மற்றும் பன்மொழி பேசும் மக்கள் ஆஸ்திரேலிய அரசு, சட்டங்கள் மற்றும் குடிமக்களின் பங்கேற்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு நடைமுறை வழிகாட்டியாகும்.
உண்மையான கதைகள் மற்றும் தெளிவான விளக்கங்கள் மூலம், ஆஸ்திரேலியாவில் அரசு எவ்வாறு செயல்படுகிறது, சட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டு மாற்றப்படுகின்றன, மற்றும் இதில் நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
சரியான சேவையைத் தேட முயற்சிப்பது, ஒரு முடிவைக் குறித்து கேள்வி எழுப்புவது, உங்கள் கருத்தைத் தெரிவிப்பது எப்படி என்பதையும் இது விளக்குகிறது.
இந்தத் தொடரின் அனைத்து நிகழ்ச்சிகளையும் தமிழ் மொழியில் கேளுங்கள்.
அடுத்து வரவிருப்பது: நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சேவைகளுக்கு எந்த (அடுக்கு) அரசு பொறுப்பு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
Coming up next: Find out which level of government is responsible for the services you use every day.
How Australia Works 60 மொழிகளில் கிடைக்கிறது. இத்தொடரை மற்ற மொழிகளிலும் கேட்டுப் பாருங்கள்.
பங்களித்தவர்கள்:
'How Australia Works' என்பது SBS Audio மற்றும் Australia Explained ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவான ஒரு வலையொலி ஆகும்.
தொகுப்பாளர்: (ஆங்கிலத்தில்) L-FRESH The LION, (தமிழில்) குலசேகரம் சஞ்சயன்
ஆராய்ச்சி மற்றும் இதழியல்: Gonzalo Aguirregomezcorta
ஒலி வடிவமைப்பு, ஒலி கலவை, அசல் இசை மற்றும் கருப்பொருள் இசை: L-FRESH The LION
சட்டம் மற்றும் குடிமைசார் ஆலோசகர்: Dr Jacinta Sassine (School of Law, Western Sydney University)
கலை மற்றும் வடிவமைப்பு: Francesco Ortiz மற்றும் Yudai Urushima
எழுத்து: Josipa Kosanovic மற்றும் Susan Burchill
உருவாக்கம் மற்றும் தயாரிப்பு: Josipa Kosanovic
ஆசிரியர், Australia Explained: Roza Germian
கல்வி மற்றும் அத்தியாவசிய சேவைகள் பிரிவுத் தலைவர், SBS Audio: Janine Googan
இந்த வலையொலி தயாரிக்கப்படும் மற்றும் கேட்கப்படும், நாடு முழுவதிலுமுள்ள நிலங்களின் பாரம்பரியக் காவலர்களை நாங்கள் அங்கீகரிக்கிறோம். கடந்த கால மற்றும் தற்போதைய மூத்த குடிமக்களுக்கு (Elders) எங்கள் மரியாதையைச் செலுத்துவதுடன், பூர்வீகக்குடியின மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களை (Aboriginal and Torres Strait Islander peoples) இக்கண்டத்தின் பூர்வீக மக்களாக அங்கீகரிக்கிறோம்.
நாடாளுமன்றம் குறித்த பகுதிகள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன. பதிப்புரிமை: Commonwealth of Australia. Creative Commons உரிமத்தின் கீழ், பொருந்தக்கூடிய உரிம விதிமுறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

![[JPG]_How-Australia-Works_Ep0.jpg](https://assets.sbs.com.au/dims4/default/9a0f61e/2147483647/strip/true/crop/3200x1800+0+0/resize/1280x720!/quality/90/?url=https%3A%2F%2Fsbs-au-brightspot.s3.ap-southeast-2.amazonaws.com%2F8f%2F15%2F83a000db458f9fc153fde8cde907%2Fjpg-how-australia-works-ep0.jpg&imwidth=1280)
![[JPG]_How-Australia-Works_Ep1.jpg](https://assets.sbs.com.au/dims4/default/d1d4da1/2147483647/strip/true/crop/3200x1800+0+0/resize/1280x720!/quality/90/?url=https%3A%2F%2Fsbs-au-brightspot.s3.ap-southeast-2.amazonaws.com%2Fe9%2F46%2F56cf4ff54074a36476e0bcb73e13%2Fjpg-how-australia-works-ep1.jpg&imwidth=1280)


