முகக்கவசம்! ஏன் தேவை? ஏன் $200 அபராதம்?

Balamuraleekrishna, Clement & Dr Shyamala Pradeepan. Source: Supplied/Getty Images
விக்டோரியா மாநிலத்தின் மெல்பேர்ன் மற்றும் Mitchell Shire பகுதிகளில் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் மக்கள் வெளியில் செல்லும்போது Face masks - முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. அல்லது $200 அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் முகக்கவசத்தின் முக்கியத்துவம், பாவனை முறைகள், பராமரிப்பு மற்றும் அதுபற்றிய பல விடையங்கள் பற்றி Newcastle பல்கலைக்கழக விரிவுரையாளரும், John Hunter வைத்தியசாலையின் சுவாசம் தொடர்பிலான சிறப்பு மருத்துவருமான (Respiratory and sleep specialist) Dr சியாமளா பிரதீபன் அவர்களுடனான உரையாடல். அத்துடன் இப்புதிய கட்டுப்பாடு குறித்து மெல்பேர்னில் வாழும் பாலமுரளிகிருஷ்ணா, க்லைமென்ட் ஆகியோரின் கருத்துகள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Share