ஏன் சுகாதார ஊழியர்களை அவமதிக்கின்றனர்? எச்சில் துப்புகின்றனர்?

Source: SBS Tamil
கொரோனா தொற்று கண்டவர்களுக்கு சிகிச்சை தருவதிலும் அல்லது பராமரிப்பதிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது பிற பணியாளர்கள் இவ்வேளையில் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களை மதிக்காமலிருப்பதும் அல்லது அவர்கள் மீது துப்புவதும் அதிகரித்துள்ளது. போலீசார், அல்லது அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் மீதும் இந்த அவமரியாதையும், தாக்குதலும் தொடர்கிறது. சில மாநில அரசுகள் இதற்காக அபராதம் விதித்து சட்டம் இயற்றியுள்ளன. நீங்கள் என்ன நினைக்கின்றிர்கள்? ஏன் மக்களில் சிலர் இப்படி செய்கின்றனர்? வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர்கள் முன்வைத்த கருத்துக்கள். கூடவே, தங்களது அனுபவத்தை பகிர்கின்றனர்: மெல்பனில் செவிலியராக (நர்ஸ்) பணியாற்றும் அல்லமதேவன் அவர்கள் மற்றும் மெல்பனில் இரத்த பரிசோதனைக்காக மக்களிடமிருந்து இரத்தமெடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சுகாதார பணியாளர் சுமதி குமாரசாமி ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share