'Call it a day' என்ற சொற்றொடர், 1830களில் பயன்படுத்தப்பட்ட 'call it half a day' என்ற பழைய சொற்றொடரிலிருந்து வந்தது. அப்போது, தொழிலாளர்கள் வேலை நேரம் முடியும் முன்பே வீடு திரும்புவதை குறிக்க இந்த சொற்றொடரை பயன்படுத்தினர்.
1919களில் அதன் சுருக்க வடிவமான 'call it a day' பரவலாகப் பயன்படுத்தப்படத் தொடங்கியது. வேலையை நிறுத்திவிட்டு, அன்றைக்கு மீதமுள்ள நேரத்தில் அந்த வேலைக்கோ அல்லது எந்த செயலுக்கோ திரும்பாமல் இருப்பது என்பது அதற்கு அர்த்தம்.
காலப்போக்கில், எந்த சூழலிலும் “இப்போது முடித்துக்கொள்வோம்” என்று சொல்லும் பொதுவான சொற்றொடராக இது மாறியது.
நீண்ட நாள் வேலைக்கு பிறகு நீங்கள் வேலையை நிறுத்தும்போது:
- We’ve had a lot of meetings. Let's call it a day.
நீங்கள் ஒரு செயற்திட்டம் அல்லது செயல்பாட்டை முடிக்கும்போது:
- I’ve been gardening all morning. I’m ready to call it a day.
நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்களோ அதை நிறுத்த விரும்பும் சாதாரண சூழ்நிலைகளிலும்:
- Have you played enough basketball? Ok, let’s call it a day, then.
நீங்கள் சோர்வாக இருக்கும்போது:
- I’ve been cleaning the house all morning — time to call it a day.
ஆங்கிலத்தில் Josipa Kosanovic தயாரித்த நிகழ்ச்சியை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


