உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள போரைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா எனும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கின்றன. இந்த தடைகள் ரஷ்யா எதிர்பார்த்த தடைகள் என்றாலும், ரஷ்யா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். கடுமையான பொருளாதாரத் தடைகள் ரஷ்யா தொடுத்துள்ள போரை நிறுத்த உதவுமா? என்ற கேள்விக்கு சர்வதேச வல்லுனர்கள் முனவைக்கும் பதில்களை தொகுத்தளிக்கிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





