தடுப்பூசி: போடமாட்டோம் Vs போடவேண்டும்: உங்கள் கருத்து?

Anbu Jaya and Vaccine Source: Getty Images
COVID 19 க்கான தடுப்பூசி போடமாட்டோம் என்றும் Coronavirus என்றெல்லாம் கிடையாது அல்லது 5G போன்றவற்றால்தான் Corona பரவுகிறது என்றெல்லாம் சிலர் கூ றுகின்றனர். Corona தடுப்பூசி உருவாக்கப்படும் முறை எங்களுக்கு ஒரு அறம் சார்ந்த கேள்வியை எழுப்புவதாக சில மத தலைவர்கள் கூறுகின்றனர். இனி Coronavirus தடுப்பூசி போடவில்லையெனில் இங்கு வராதே என்று பணியிடங்களில் கூறப்படலாம். ஆஸ்திரேலியாவுக்கு வர அனுமதி இல்லை அல்லது சிலருக்கு கொடுப்பனவு இல்லை என்று அரசு ஒருவேளை கூறலாம். இப்படி மக்களுக்கு மறைமுக அழுத்தம் தந்து coronavirus தடுப்பூசி கட்டாயமாக்கப்பட வேண்டுமா? "வாங்க பேசலாம்" இந்நிகழ்ச்சியில் நேயர்கள் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு. இவர்களோடு தனது கருத்தை பகிர்ந்தவர்: அன்பு ஜெயா அவர்கள். அவர் B.Pharm., MMedSc (UNSW) எனும் பட்டங்களைப் பெற்றவர். Pfizer நிறுவனத்தில் Scientific Affairs Director பதவி வகித்து ஒய்வு பெற்றவர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share