இடப்பெயர்வு, தப்பபிப்பிராயம், முதுமை, காதல் மற்றும் குடும்பத்தின் உடைக்க முடியாத பிணைப்புகள் ஆகிய மனித பண்புகளிலுள்ள சிக்கல்களை ஆழமாக, அடர்த்தியாக இந்தக் கதையில் ஆராய்ந்துள்ளார் ஸ்ரீதேவி ஐயர்.
தனது பின்னணி, எழுத்து மேலுள்ள அவரது ஆர்வம் மற்றும் அவர் சமீபத்தில் எழுதிய “The Tiniest House of Time” என்ற புத்தகம் குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் மனம் திறந்து பேசுகிறார் ஸ்ரீதேவி ஐயர்.