குழந்தைக் கவி அம்பிக்கு வயது 90

Source: SBS
ஈழத்தைச் சேர்ந்த அம்பி என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர் அவர்கள் குழந்தைக் கவிஞன் என்றும் ஈழத்தின் தேசிகவிநாயகம் பிள்ளை என்றும் போற்றப்படுபவர். எளிமையும் தமிழின் அழகும் ஒருங்கே கூடியமையும் அவர் பாடல்கள் பல குழந்தைகளின் நாவில் இன்றும் தவழ்வன. தமிழ் மொழி வளர்ப்பு, கவிதை என்று பல தளங்களில் சாதனைகள் செய்த கவிஞர் அம்பி அவர்களுக்கு ஆஸ்திரேலிய தமிழ் சமூகம் அவரைக் கொண்டாடும் வகையில் பாராட்டு நிகழ்வை எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (28 April, 2019) சிட்னி யாழ்நிகழ்வரங்கில் மாலை 4 மணிக்கு நடத்துகிறது. கவி அம்பி குறித்த விவரணமொன்றை முன்வைக்கிறார் யசோதா பத்மநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share