ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் அவர்களின் நினைவாக, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றியோருக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது.
கௌரவமாகக் கருதப்படும் இந்த விருது, ஆல்ப்ரெட் நோபலின் நினைவு தினமான டிச., 10ம் தேதி, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் வழங்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசளிப்பு விழா மட்டும், ஐரோப்பிய நாடான நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடத்தப்படும்.
நடப்பு 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேதியல் - Chemistry
பிரான்சின் பாரிஸ் நகரில் பிறந்து அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் Moungi G. Bawendi மவுங்கி பவெண்டி, அமெரிக்காவில் பிறந்து கொலம்பியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றும் Louis E Brus லூயிஸ் புரூஸ், ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நானோகிரிஸ்டல்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றிய Alexei I Eskimov அலெக்சி எகிமோவ் ஆகியோர் வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குவாண்டம் புள்ளிகளை கண்டறிந்து தொகுத்ததற்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது கண்டுபிடிப்புதான், LED-க்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. QLED technology யில் செயற்படும் tv screens மற்றும் கம்பியூட்டர் screen என்பவற்றில் பிரகாசத்தை ஏற்படுத்த Quantum dots இப்போது பயன்படுகிறது. இதைத்தவிரவும் LED bulbs/ lights போன்றவற்றிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. விசேடமாக biological tissues என்ற உடலியல் இழைமங்களை விரிவுபடுத்த வைத்தியநிபுணர்கள் இந்த quantum dots தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். குவாண்டம் புள்ளி quantum dots எனப்படும் ஒளியை உமிழும் மிகவும் நுட்பமான பொருள் குறித்து ஆய்வு செய்துள்ள மூன்று விஞ்ஞானிகளுக்கு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த குவாண்டம் புள்ளிகள் எவ்வாறு வேதியியல் மாற்றத்துக்கு உட்பட்டு, வெளிச்சத்தை வெளியேற்றுகின்றன உள்ளிட்ட சோதனைகளில், இந்த மூவரும் ஈடுபட்டுஉள்ளனர்.
இலக்கியம் - Literature
2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு நோர்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் Jon Fosse ஜொன் பொஸே தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 64.

இந்த ஆண்டு இலக்கியப் பரிசு பெற்ற Jon Fosse, Minimalism சிறுமக் கருதுகோள் கோட்பாடு என்று அழைக்கப்படும் ஒரு மிகச்சிறந்த பாணியில் குறுகிய நாவல்களை எழுதியுள்ளார்.
அவர் எழுதிய புதிய நாடகம் மற்றும் உரைநடைக்காக, நோபல் பரிசு பெற தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நார்வே நாட்டின் மிகச்சிறந்த நாடக ஆசிரியரான போசே, 40க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது நாடகங்கள் மற்றும் நாவல்கள் மனிதரின் பிறப்பு, இறப்பு, நம்பிக்கை போன்ற அடிப்படை விடயங்களைப் பேசுகிறது. நார்வேயில் பேசப்படும் நார்வேயன் மொழியில் இரண்டு version கள் வடிவங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் பிரபலமில்லாத ஒரு version இல் எழுதும் இவர் அந்த மொழிக்கான அங்கீகாரமாக இந்த விருதைக் கருதுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அமைதி - Peace
அமைதிக்கான அல்லது சமாதானத்திற்கான நோபல்பரிசு இரானில் சிறையிலிருக்கும் பெண்ணுரிமை ஆர்வலர் Narges Mohammadi இற்கு வழங்கப்படுகிறது. இரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக க் குரல் கொடுத்துவருவதற்காகவும் மனித உரிமை , எல்லோருக்கும் சுதந்திரம், மரணதண்டனையை ஒழித்தல் என்பவை தொடர்பாக தொடர்ந்து போராடி வருவதற்காகவும் இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.
அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார் என்பதுடன் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளதால் இவர் இப்போது Tehran இலுள்ள Evin சிறைச்சாலையில் 12 வருட சிறைத்தண்டனையைக் கழித்துவருகிறார்.

2003 இல் நோபல் பரிசு பெற்ற Shrin Ebadi ஆரம்பித்த NGO- அரசு சாரா அமைப்பான Human Rights Centre என்ற அமைப்பின் உபதலைவராகவும் இருக்கிறார் Narges Mohammadi.
இயற்பியல் - Physics
நடப்பு ஆண்டில் இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அமெரிக்காவைச்சேர்ந்த Pierre Agostini பியரி அகோஸ்டினி, ஜெர்மனியைச் சேர்ந்த Ferenc Krausz பெரென்க் க்ரவுஸ், சுவீடனைச்சேர்ந்த Anne L’Huillier ஆனி ஹூலியர் ஆகிய 3 பேருக்கு நடப்பு ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
எலக்ட்ரான் மற்றும் ஆற்றலை விரைவாக செயல்முறைப்படுத்தும் அளவீடுகளை பயன்படுத்துவதற்கான கருவிகளை கண்டறிந்ததால் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அணுக்களில் உள்ள மூலக்கூறுகள் மற்றும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதற்காக புதிய கருவியை இவர்கள் 3 பேரும் சேர்ந்து கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அணுக்களில் மூலக்கூறுகளுக்கு இடையே இருக்கும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதன் மூலம் புதுவிதமான ஒரு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். இது அறிவியல் உலகத்திற்கும், வருங்கால தொழில்நுட்பத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். குவாண்டம் மெக்கானிக் என்பது போன்ற விஷயங்களுக்கு இது பயன்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த கருவியில் இவர்கள் 3 பேரின் பங்களிப்பும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எலக்ட்ரான்களுக்கு இடையில் ஏற்படும் திசைவேக மாற்றம் மற்றும் ஆட்டோசெகண்ட் எனப்படுகின்ற ஹார்ட்பீட் மற்றும் age of universe போன்றவற்றை இதன் மூலம் கண்டறிய முடியும். அதாவது பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு அணுவில் உள்ள மாற்றங்களையும் இந்த கருவியின் மூலம் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. எனவே இது விண்வெளி துறையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக எலக்ட்ரான்களுக்கு இடையில் ஏற்படும் திசைவேக மாற்றம் மற்றும் ஆட்டோசெகண்ட் எனப்படுகின்ற ஹார்ட்பீட் மற்றும் ஏஜ் ஆப் யுனிவர்ஸ் போன்றவற்றை இதன் மூலம் கண்டறிய முடியும். அதாவது பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு அணுவில் உள்ள மாற்றங்களையும் இந்த கருவியின் மூலம் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது. எனவே இது விண்வெளி துறையிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்சியாக க் கருதப்படுகிறது.
மருத்துவம் - Medicine
மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் Katalin Karakoram கட்டாலின் கரிக்கோ, Drew Weissman ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கூட்டாக அளிக்கப்படுகிறது. Vaccine தடுப்பூசி உற்பத்தியில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் ட்ரே வீஸ்மேன் என இருவரும் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி உருவாக்கியதற்காக அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர்/ஆய்வாளர் முன்னர் நோபல் பரிசு வென்றிருந்தாலும், சர்வதேச அளவில் அமெரிக்காவில்தான் கொரோனா தொற்று உயிரிழப்பு அதிகம். இவர்கள் இருவரும் கொரோனா தொற்றுக்கு எதிரான mRNA தடுப்பூசியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். கொரோனா வைரஸில் உள்ள மரபு சங்கிலியான RNAவில் பல பிரதிகள் இருக்கும். இதில் ஒன்றுதான் mRNA. இந்த mRNA பிரதியை தனியாக பிரித்தெடுத்து, அதைபோலவே போலியான ஒன்றை உருவாக்கி அதை உடலுக்குள் செலுத்தினால் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம், போலியான mRNAவை எதிர்த்து சண்டை செய்யும். பின்னர் இதேபோன்று எப்போதாவது உண்மையான mRNA வந்தாலும் அதற்கு எதிராக சண்டை செய்து, தொற்று பாதிப்பிலிருந்து மனிதனை காப்பாற்றிவிட முடியும். இதை அடிப்படையாக கொண்டுதான் தடுப்பூசிகளை ஃபைசர், மாடர்னா நிறுவனங்கள் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன
பொருளாதாரம் - Economics
ஹாவார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Claudia Goldin க்ளோடியா கோல்டினுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இவ்வருடம் வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் அவர்கள் பெறும் வேதனம் தொடர்பாக அவர் செய்த ஆய்வுகளுக்காகவும் labour market என்ற தொழில் ஆற்றுவோரின் சந்தையில் gender differences என்ற ஆண் பெண் பாகுபாடுகளை உருவாக்கும் காரணிகள் தொடர்பான சிக்கல்களை ஆராய்ந் த்தற்காகவும் இப்பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுகளை வழங்கும் The Royal Swedish Academy of Sciences தெரிவித்திருக்கிறது.

Harvard பல்கலைக்கழகத்தில் பொருளாதாதாரத்துறைக்கு 1990 இல் பொறுப்பேற்ற முதல் பெண்மணியான Claudia Goldin ‘ஆண்பெண் ஆகியோருக்கிடையே வேதனங்களுக்கிடையே இன்னும் பெரும் பாரபட்சம் நிலவுவதால் இந்த ஆய்வுகள் பிரதானமாகின்றன’ என்று தெரிவித்திருக்கிறார். இந்தப்பரிசு காரணமாக எதிர்காலத்தில் பல மாற்றங்கள் உருவாகலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
