SKIP TO MAIN CONTENT

சிட்னியில் 87 மில்லியன் டொலர் பெறுமதியான 300KG போதைப்பொருள் மீட்பு!

NSW Police
Source: NSW Police

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

Highlights

  • சிட்னி மேற்கில் 300 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது
  • சம்பவத்துடன் தொடர்புடையதாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
  • நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரும் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் 87 மில்லியன் டொலர்கள் பெறுமதியான சுமார் 300 கிலோகிராம் methylamphetamine (ice)போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிட்னி மேற்கில் Kingswood பகுதியில் வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட பொலிஸார் 41 கிலோகிராம் போதைப்பொருளை மீட்டதாகவும், இதைத் தொடர்ந்து வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 248 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் 3 லட்சம் டொலர் பணம், கைபேசிகள் மற்றும் விலையுயர்ந்த கடிகாரங்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட இருவர் மீதும் பல பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் பிணையில் செல்வதற்கு விண்ணப்பிக்காதநிலையில் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தகட்ட விசாரணைகளுக்காக எதிர்வரும் ஜுன் 25ம் திகதி குறித்த இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரும் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் இம்மாபெரும் போதைப்பொருள் விநியோக நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now