SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா திரும்பமுடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த மற்றுமொருவர் கோவிட்டுக்கு பலி!

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பமுடியாத நிலையிலிருந்த மற்றுமொரு நபர் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

Sunil Kanna
Source: ABC Australia

2 min read

Published

Updated

By Renuka


Skip to article content

Highlights

  • ஆஸ்திரேலிய குடியுரிமையுள்ள சுனில் கண்ணா ஏப்ரல் 29ம் திகதி மரணமடைந்தார்.
  • சுனில் கண்ணாவின் தாயாரும் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்.
  • 11 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் நாடுதிரும்பமுடியாமல் இந்தியாவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய குடியுரிமையுள்ள சுனில் கண்ணா என்ற 51 வயது நபரே இவ்வாறு மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் இந்தியாவிலிருந்த தனது பெற்றோரை ஆஸ்திரேலியா அழைத்துவருவதற்காக அங்கு சென்றிருந்ததாக அவரது குடிவரவு முகவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்று காரணமாக சுனில் கண்ணா ஏப்ரல் 29ம் திகதி மரணமடைந்ததாகவும் அதற்கு அடுத்தநாள் ஏப்ரல் 30ம் திகதி சுனில் கண்ணாவின் தாயாரும் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்துவிட்டதாகவும் குடிவரவு முகவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா திரும்ப முடியாத நிலையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி இந்தியாவிலேயே மரணமடைந்த மூன்றாவது நபர் சுனில் கண்ணா ஆவார்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கோவிட் பேரவலத்தையடுத்து அங்கிருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்ட பயணத்தடை தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும் விமானப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னரான கட்டுப்பாடுகள் இறுக்கமாக பேணப்படுவதால் பலர் அங்கிருந்து ஆஸ்திரேலியா திரும்புவது கடினமாகியுள்ளது.

சுமார் 11 ஆயிரம் ஆஸ்திரேலியர்கள் நாடுதிரும்பமுடியாமல் இந்தியாவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now