கோவிட்-19 தடுப்பூசி மற்றும் booster பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

Omicron திரிபு உலகளாவிய ரீதியல் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் பின்னணியில், கோவிட்-19 தடுப்பூசி மற்றும் booster பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.

The Coordinator General of Operation COVID Shield Lieutenant General John Frewen receives his COVID-19 vaccination booster dose at Erindale Pharmacy in Canberra, Tuesday, December 14, 2021. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

The Coordinator General of Operation COVID Shield Lieutenant General John Frewen receives his COVID-19 vaccination booster dose in Canberra. Source: AAPAAP Image/Lukas Coch

ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் அதிகளவு எண்ணிக்கையிலானோர் கோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதன் காரணமாக, சர்வதேச பயணம் மீண்டும் ஆரம்பித்துள்ளதுடன் கோவிட் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவருகின்றன.

இதன் விளைவாக, கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய Omicron திரிபு மற்றும் Delta திரிபுகளின் பரவலிலிருந்து அதிக பாதுகாப்பைப் பெறுவதற்கு, booster தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
PM Morrison received his COVID-19 booster vaccination with elderly Jane Malysiak in NSW.
PM Scott Morrison received his COVID-19 booster vaccination alongside Jane Malysiak in NSW. Source: SMH POOL
ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Greg Hunt இம்மாத தொடக்கத்தில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் booster தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடக்கிவைத்தார்.

மேலும் இருசுற்று தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள் omicron திரிபிற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பைக் கொண்டிருக்கக்கூடும் என்பதால், மூன்றாவதாக booster தடுப்பூசியை ஆஸ்திரேலியர்கள் முடிந்தவரை விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதையொட்டி நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய ஆலோசனைக் குழு (ATAGI) Booster தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான கால இடைவெளியை ஆறு மாதங்களிலிருந்து ஐந்து மாதங்களாக குறைத்துள்ளது.

அதாவது உங்களது கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது சுற்றைப் பெற்று ஐந்து மாதங்கள் கடந்துவிட்டதென்றால், உங்களுக்கான booster தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.
child vaccinated
Vaccinating children can help reduce community transmission and prevent them passing the virus onto the wider community. Source: Getty Images
ATAGI ஆலோசனையின்படி மூன்றாவது சுற்றாக Pfizer தடுப்பூசியையையோ அல்லது Moderna தடுப்பூசியையோ போட்டுக்கொள்ளலாம்.  ஒரு நபர் தனது முதன்மையான தடுப்பூசியாக எதனைப் போட்டுக்கொண்டார் என்பது பொருட்டல்ல.

ஆஸ்திரேலியாவின் கோவிட்-19 booster தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஏதேனும் அபாயங்கள் அல்லது பக்க விளைவுகள் உள்ளனவா?

Booster தடுப்பூசிகள் முந்தைய சுற்றுக்களில் பயன்படுத்தப்பட்ட அதே தடுப்பூசிகள் என்பதால், பக்க விளைவுகள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைவருக்கும் போதுமான booster தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளனவா?

ஆஸ்திரேலியா booster தடுப்பூசிகளை வழங்க நன்கு தயாராக உள்ளது என சுகாதார அமைச்சர் Greg Hunt கடந்த அக்டோபரில் தெரிவித்திருந்தார்.

Booster தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது?

நாம் பெற்றுக்கொள்ளும் முதலாவது மற்றும் இரண்டாவது சுற்று கோவிட் தடுப்பூசியினது செயல்பாட்டையே booster தடுப்பூசிகளும் செய்கின்றன.

நோய்த்தொற்று மற்றும் வைரஸ் பரவல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக கோவிட் தடுப்பூசியிலிருந்து நாம் பெறும் பாதுகாப்பானது, இன்னும் வலுவானதாகவும் இன்னும் நீண்ட காலத்திற்கு நீடிப்பதாகவும் இருப்பதை booster தடுப்பூசி உறுதிப்படுத்தும்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி

ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசிக்கு TGA மற்றும் ATAGI ஆகியவை தற்காலிகமாக ஒப்புதல் அளித்துள்ளன.

தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், பெரும்பாலான பக்க விளைவுகள் லேசானவை என்பதை நிரூபிக்கும் சமீபத்திய மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ATAGI தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்பதுடன், ஜனவரி 10 2022 முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கும்.

எப்படி முன்பதிவு செய்ய வேண்டும்?

குடும்ப மருத்துவர்கள், பூர்வீக குடி பின்னணி கொண்டவர்களுக்கான சுகாதார சேவைகள், மருந்தகங்கள் மற்றும் மாநில மற்றும் பிராந்திய கிளினிக்குகள் மூலம் இத்தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.

அரசின் Vaccine Clinic Finder இணையதளத்தில் நீங்கள் முன்பதிவு செய்யலாம்.
International students return to Australia
Booster doses provide an added layer of protection. Source: AAPAAP Image/Bianca De Marchi

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 
ACT 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 
ACT 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published

Updated

By Vrishali Jain

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand