SKIP TO MAIN CONTENT

NSW மாநிலத்தவர்களுக்கான $100 இலவச கூப்பன்: எப்படி விண்ணப்பிப்பது?

A file photo of people dining at Sydney's Circular Quay.
A file photo of people dining at Sydney's Circular Quay. Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

கோவிட் கட்டுப்பாடுகளினால் பாதிப்புக்குள்ளான சுற்றுலாத்துறை மற்றும் உணவகங்கள், மீண்டும் தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றமடைய ஊக்குவிக்கும்வகையில், நியூ சவுத் வேல்ஸ் மக்களுக்கு மாநில அரசு அறிவித்த நூறு டொலர்கள் இலவச கூப்பன் வழங்கும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இதன்கீழ் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தலா 25 டொலர் பெறுமதியான 2 இலவச உணவுக் கூப்பன்கள் மற்றும் தலா 25 டொலர் பெறுமதியான 2 பொழுதுபோக்கு தொடர்பான கூப்பன்கள் வழங்கப்படுகிறது.

இந்தக்கூப்பன்களைப் பெற்றுக்கொள்வதற்கு  service.nsw.gov.au என்ற இணைப்பினூடாக விண்ணப்பிக்க முடியும்.

மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் பெற்றுக்கொள்ளும் கூப்பன்களை ஜுன் 30ம் திகதிக்குள் பயன்படுத்த வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now