SKIP TO MAIN CONTENT

Artificial Sweeteners - செயற்கை இனிப்பூட்டிகள் புற்றுநோயை ஏற்படுத்துமா?

Artificial sweeteners -செயற்கை இனிப்பூட்டிகளுள் ஒன்றான aspartame புற்று நோயை ஏற்படுத்தக்கூடும் என்று WHO – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளது.

FOOD- Large Format Close Up of a Cappuccino Coffee With Beautiful Foam Art.
Note- All Brand Names Removed. Large Format close up of a Cappuccino coffee with a fancy design in the foam. Served in a Savannah, Georgia restaurant. Source: iStockphoto / Sherry Epley/Getty Images/iStockphoto

4 min read

Published

By R.Sathiyanathan

Source: SBS


Skip to article content

ஏன் இந்த எச்சரிக்கை என்று தெரிந்துகொள்ளும் முன்னர், Artificial Sweeteners - செயற்கை இனிப்பூட்டிகள் என்ன செய்கின்றன, எப்படி தயாரிக்கப்படுகின்றன என்று பார்ப்போம்.

தாவரங்களில் இருந்து பெறப்படும் sugars – இனிப்பு அளவுக்கதிகமான கலோரிகளை உடலுக்கு வழங்குவதாலும் obesity என்ற உடற்பருமன் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் diabetics என்ற நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சாதாரண தாவரங்களில் இருந்து பெறப்படும் இனிப்பு உதவாது என்ற காரணத்தாலும் செயற்கை இனிப்பூட்டி பெருமளவில் பிரபலமாகியிருக்கின்றன.

முதலாவது உலக யுத்த காலத்தில் சீனிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக sucrose என்ற சீனிக்கு மாற்றாகப் பயன்பாட்டுக்கு வந்ததுதான் saccharin என்ற artificial sweeteners - செயற்கை இனிப்பூட்டி உருவான கதை.

Selective focus of a bottle of pure aspartame and saccharin artificial sweetener sugar substitute chemical compound comparison. White laboratory background with copy space.
Selective focus of a bottle of pure aspartame and saccharin artificial sweetener sugar substitute chemical compound comparison. White laboratory background with copy space. Source: iStockphoto / John Kevin/Getty Images/iStockphoto

Saccharin தான் முதன்முதலில் 1879 இல் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்ட (synthesised) செயற்கை இனிப்பூட்டி. கரும்பிலிருந்து பெறப்படும் சீனியைவிட 550 மடங்கு இனிப்பானது. சுமார் 100 ஆண்டுகளுக்குமேல் பெருமளவில் பயன்பாட்டிலிருந்த ‘sweetn’low’ என்று வர்ணிக்கப்பட்ட saccharin, எலிகளின் சிறுநீரகத்தில் புற்றுநோயை( bladder cancer ) ஏற்படுத்துகிறது என்று 1970 இல் ஆய்வு கூட சோதனைகளின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் காரணமாக செல்வாக்கிழந்தது.

இந்த காலகட்டத்தில் 1980 களில் aspartame என்ற செயற்கை இனிப்பூட்டி பிரபலமானது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸீலந்து போன்ற பல நாடுகள் aspartameஐ அங்கீகரித்தன. Nutrasweet மற்றும் equal என்ற வர்த்தகப் பெயர்களில் இவை இப்போது பரவலாகப் சீனியைப் போலப் பயன்படுத்தப்படுகின்றன. நம்மில் பலரும்கூட இதை பயன்படுத்திவருகிறோம்.

Nutrasweet மற்றும் equal பிரபலமாக இருக்கும் பின்னணியில், தற்போது அதிரடியாக WHO உலக சுகாதார நிறுவனம் aspartame என்ற செயற்கை இனிப்பூட்டி ‘possibly carcinogenic’ புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்ற எச்சரிக்கையை விட இப்போது தீர்மானித்திருக்கிறது.

Artificial sweetener aspartame is harmful to health
The World Health Organization’s International Agency for Research on Cancer analyzed the potential carcinogenic effects of the sweetener. Source: iStockphoto / JUN LI/Getty Images

Aspartame தவிர வேறு என்ன செயற்கை இனிப்பூட்டிகளும் சந்தையில் உள்ளன. முக்கியமாக, acesulfame, neotame, saccharin, sucralose என்பவற்றைச் சொல்லலாம். இருந்தாலும், aspartame தான் பல குளிர்பானங்கள், தேயிலைப்பானங்கள், காப்பிப்பானங்கள், ice cream, yogurt என்று பலவகையான உணவுப்பொருட்களில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. Aspartame சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்கள் ‘healthy’ and ‘diet’ என்ற விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தப்பட்டாலும், நீரிழிவு நோயின் பாதிப்பைக் குறைப்பதற்கும் obesity என்ற உடற்பருமன் அதிகரிக்கும் பிரச்சனைக்கும் aspartame காரணம் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. உண்மையில் செயற்கை இனிப்பூட்டிகள் hunger sensation என்ற பசிக்கும் உணர்வை அதிகப்படுத்துவதாகவும் இதனால் அதிக உணவை உட்கொள்ளவேண்டிய நிலையை உருவாக்கி உடற்பருமனை அதிகரிக்கச்செய்வதாகவும் ஆய்வக அறிக்கைகள் சொல்கின்றன.

செயற்கை இனிப்பூட்டிகள் உட்கொள்வதால் புற்றுநோய், மார்பகப்புற்றுநோய், உடல்பருமன் அதிகரிப்பதோடு தொடர்பான புற்றுநோய் ‘obesity related cancers’ என்பன சற்று அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுவே நமக்கு எச்சரிக்கை தரும் செய்தி. இருந்தபோதும் FDA Food and Drug Administration மற்றும் American Cancer Society போன்ற அமைப்புகள் aspartame பாதுகாப்பானது என்றே இப்போதும் சொல்கின்றன.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான FDA - Food and Drug Administration செயற்கை இனிப்பூட்டி aspartame பாதுகாப்பானது என்று கூற காரங்கள் உள்ளன. அமெரிக்காவிலுள்ள FDA Food and Drug administration அமைப்பு மிக சக்திமிக்க அமைப்பாகும். உலகில் பல நாடுகள் FDA வின் நகர்வுகளை அவதானித்தே தமது நாடுகளில் உணவு மற்றும் மருந்துப்பொருட்களுக்கான சட்டதிட்டங்களை வகுக்கின்றன. சராசரி மனிதன் உட்கொள்ளும் செயற்கை இனிப்பூட்டியான aspartame இன் அளவு எந்தவிதத்திலும் அவனைப் பாதிக்காது என்றும் ஒருவர் 18 cans of drink sweetened with aspartame – அதாவது aspartame சேர்க்கப்பட்ட குளிர்பான டின்கள் 18 இற்கு மேல் ஒருவர் தினமும் அருந்தினால் மட்டுமே negative health consequences என்ற நலரீதியான எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என்றும் FDA சொல்கிறது. அத்தோடு aspartame என்பது sucrose என்ற சீனியைவிட 180 முதல் 200 மடங்கு இனிப்பைக்கொண்டிருப்பதால் பானங்களுக்கு மிகமிக சிறிய அளவிலேயே இது சேர்க்கப்படுகின்றது என்பதும் FDA கூறுகிறது.

Woman Adding Artificial Sweetener To Coffee
Woman Adding Artificial Sweetener To Coffee Source: iStockphoto / Highwaystarz-Photography/Getty Images/iStockphoto

உலகில் பல நிறுவனங்கள், *இன்னும் குறிப்பாக Coca-Cola போன்ற குளிர்பான தயாரிப்புகள், chewing gum, gelatine, Nutrasweet, equal போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களும் aspartame ஐப் பயன்படுத்துகின்றன.

இந்த பின்னணியில் இப்போது WHO – உலக சுகாதார அமைப்பு aspartame புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயற்கை இனிப்பூட்டி என்று எச்சரிக்கை விடுக்க திட்டமிட்டுவருவதை இந்த உலகின் பெரும் நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. WHO வின் இந்த முடிவு பிழையான முன்னுதாரணமாகும் என்றும் தேவையற்ற அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கும் செயல் என்றும் இந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

ISA எனப்படும் International Sweetners Associationஇன் தலைவர் Frances Hunt Wood இதுபற்றிக் கருத்து தெரிவிக்கையில், ‘aspartame வரலாற்று ரீதியாக மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் ஆய்வு செய்யப்பட்ட பொருள் என்றும் உலகிலுள்ள உணவு பாதுகாப்புக்குப் பொறுப்பான 90 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் aspartame பாதுகாப்பானது என்று அறிவித்திருப்பதாகவும்’ கூறுகிறார்.

PKU எனப்படும் phenylketonuria என்ற மிக மிக அரிதான – அதாவது rare genetic disorder நோய் உள்ளவர்கள் aspartame சேர்க்கப்பட்ட பானங்களை உட்கொள்ளக்கூடாது என்ற எச்சரிக்கை aspartame உள்ள எல்லா உணவுப்பொருட்களின் வெளிஉறைகளிலும் உண்டு. பலரும் குடிக்கும் Coca Cola பாட்டில்களிலும் இது உண்டு. இந்த வகை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால் எல்லோருக்கும் aspartame பாதுகாப்பற்றது என்று சொல்வது பொருத்தமற்றது என்று Coca Cola நிறுவனம் வாதிடுகிறது.

ஆஸ்திரேலியாவைப்பொறுத்த அளவில் FSANZ எனப்படும் Food Standards of Australia and New Zealand அமைப்பு இதுவரை தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. Aspartame பாதுகாப்பானது என்பதே அதன் தீர்மானமாகும். ‘FSANZ மற்றும் உலக அமைப்புகள் aspartame தொடர்பாக முழுமையான ஆய்வுகளைச்செய்திருப்பதாகவும் இதுவரை உலகமட்டத்தில் வெளிவந்துள்ள விஞ்ஞான ஆய்வறிக்கைகள் அனைத்தும் aspartame ஐ செயற்கை இனிப்பூட்டியாகப் பயன்படுத்துவதை ஆதரிக்கின்றன என்றும் Food Standards Australian and New Zealand சொல்கிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now