கோவிட் பேரிடர் கால நிதியாக ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு 55 லட்சம் டொலர்களை வழங்குவதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார்.
இந்து சமூத்திர பிராந்திய நாடுகளில் பரவலடைந்துள்ள கோவிட் தொற்றினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஆஸ்திரேலிய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியின் ஒரு அங்கமாக இந்த உதவி வழங்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
கோவிட் பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கைக்கு ஆஸ்திரேலியா புதிதாக அறிவித்துள்ள 55 லட்சம் டொலர்களுடன் மொத்தம் ஒரு கோடி 17 லட்சம் டொலர்களை வழங்கியுள்ளது.
கோவிட் பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கை அதனை எதிர்த்து போராடி பாதுகாப்பான சூழலை மீளக்கொண்டுவருவதற்கு ஆஸ்திரேலியா எப்போதும் துணை நிற்கும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ள இந்த புதிய நிதி அதன் ஒரு அங்கமே எனவும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் David Holly தெரிவித்துள்ளார்.
இதுதவிர நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலிய அரசு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் டொலர்களை கோவிட் பேரிடர் கால நிதியுதவியாக வழங்கியுள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
