SKIP TO MAIN CONTENT

கோவிட் தொடர்பிலான அனைத்து எல்லைக் கட்டுப்பாடுகளையும் ஆஸ்திரேலியா நீக்குகிறது!

இன்று புதன்கிழமை, ஜுலை 6ம் திகதி முதல், ஆஸ்திரேலியா வரும் சர்வதேச பயணிகள், கோவிட் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா இல்லையா என்ற தகவலை வழங்கவேண்டிய அவசியமில்லை.

Travel
Travellers at the Qantas Terminal at Melbourne Airport in Melbourne. Source: AAP Image/Joel Carrett

2 min read

Published

Updated


Skip to article content

அதுமட்டுமல்லாமல் தங்களுடைய தொடர்பு விவரங்கள் மற்றும் கடந்த 14 நாட்களில் எங்கு இருந்தார்கள் என்ற தகவல்களையும் வழங்க வேண்டியதில்லை.

மேலும் டிஜிட்டல் பயணிகள் பிரகடனத்தின் (DPD) கீழ், தனிமைப்படுத்தல் மற்றும் சோதனை நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டிய அவசியமுமில்லை.

நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி  Paul Kelly அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், இக்கட்டுப்பாட்டு தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் Mark Butler தெரிவித்தார்.

Health Minister Mark Butler has stressed the need to protect children against influenza.
Health Minister Mark Butler has stressed the need to protect children against influenza. Source: AAP/LUKAS COCH/AAPIMAGE

இது ஒரு வரவேற்கத்தக்க விடயம் எனத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் Clare O'Neil, ஆஸ்திரேலியாவுக்கான அனைத்து வகை விசா வைத்திருப்பவர்களும் பயண விலக்கு அனுமதி பெறாமல் இனிமேல் பயணம் செய்யலாம் என குறிப்பிட்டார்.

வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளநிலையில், இத்தகைய கட்டுப்பாடுகளை நீக்குவதால் விமான நிலையங்களில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க முடியும் எனவும், வெளிநாட்டவர்கள் பலரும் ஆஸ்திரேலியாவுக்கு வருவதை ஊக்குவிக்கும் எனவும் Clare O'Neil மேலும் தெரிவித்தார்.

Clare O'Niel
Australian Minister for Home Affairs, Clare O'Niel. Source: AAP Image/Darren England

இருப்பினும், பயணிகள் விமான நிறுவனங்கள், பிற நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் நடைமுறைப்படுத்தப்படும் கோவிட் தொடர்பிலான கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் சர்வதேச விமானங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடும் அடங்குகிறது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now