கொரோனா பரவலையடுத்து எல்லைக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக பின்பற்றிவரும் ஆஸ்திரேலிய அரசு, எதிர்வரும் ஆகஸ்ட் 11ம் திகதிமுதல் வெளிநாடுவாழ் ஆஸ்திரேலியர்களுக்கான பயணக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி பல்வேறு காரணங்களின் நிமித்தம் வெளிநாடுகளிலே வாழ்ந்துவரும் ஆஸ்திரேலியர்கள்( ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள்) தமது உறவினரையோ குடும்பத்தையோ பார்வையிடுவதற்கோ அல்லது வேறு ஏதேனும் தேவைக்காக ஆஸ்திரேலியா வந்தால், அவர்கள் மீண்டும் இங்கிருந்து வெளியே செல்வதற்கு அரசின் அனுமதி பெறவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியர் ஒருவர் வெளிநாடு செல்வதற்கு விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும் என்பதுடன், ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை இல்லாதோர் வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
ஆனால் வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் ஆஸ்திரேலியர்கள், தாம் பொதுவாகவே வெளிநாட்டில்தான் வாழ்பவர்கள் என்பதை நிரூபிக்கும்பட்சத்தில் அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறுவதற்கு விதிவிலக்கு அனுமதிபெறவேண்டிய தேவையிருக்கவில்லை.
இதைப்பயன்படுத்தி வெளிநாடுவாழ் ஆஸ்திரேலியர்கள் பலர் அடிக்கடி ஆஸ்திரேலியாவுக்கு வந்துசெல்வதாகவும், இதைத்தடுக்கும் நோக்கில் இனிவரும் நாட்களில் அவர்கள் ஆஸ்திரேலியா வந்து திரும்பிச்செல்லும்போது விதிவிலக்கு அனுமதிபெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் தனிமைப்படுத்தல் மையங்களிலுள்ள இடங்களை, அதிகம் தேவையிலுள்ளவர்களுக்கு, குறிப்பாக நாடுதிரும்புவதற்காக பல மாதங்கள் காத்துக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்கள் பயன்படுத்த முடியும் என அரசு நம்புகிறது.
மேற்குறித்த மாற்றங்கள் அடங்கிய தீர்மானவரைபை சுகாதார அமைச்சர் Greg Hunt நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாகவும், ஆனால் இதை பகிரங்கமாக அறிவிப்பதற்கான ஊடக அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
அரசின் இப்புதிய நடைமுறை தமக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள வெளிநாடுவாழ் ஆஸ்திரேலியர்கள் பலர் இதற்கெதிராக கையெழுத்து வேட்டை ஒன்றையும் ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் நாடுதிரும்புவதற்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
- செய்தி மற்றும் தகவல்களை 63 மொழிகளில் பெற்றுக்கொள்ள:sbs.com.au/coronavirus
- ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களுக்கு: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
- கோவிட் தடுப்பூசி குறித்த தகவல்களை உங்கள் மொழியில் பெற்றிட: COVID-19 vaccine in your language.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் கோவிட் சோதனையை எங்கே மேற்கொள்ளலாம் என்ற விவரங்களை கீழுள்ள இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் கோவிட் பேரிடர்கால கொடுப்பனவு எவ்வாறு உள்ளது என்பதை கீழுள்ள இணைப்புக்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.
NSW Travel & transport and Quarantine
VIC Travel permit, Overseas travellers and Quarantine
ACT Transport and Quarantine
NT Travel and Quarantine
QLD Travel and Quarantine
SA Travel and Quarantine
TAS Travel and Quarantine
WA Travel and Quarantine
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்லவேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதிபெறவேண்டும். இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப்போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
