சிட்னி கார் விபத்தில் தாய் மற்றும் இரு குழந்தைகள் பலி!

சிட்னியின் தென்மேற்கில் கார் மற்றும் cement truck மோதியதில், மூன்று மாத பெண் குழந்தை, அதன் தாய் மற்றும் மூத்த சகோதரர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். WARNING: This story contains content that listeners may find distressing.

image (12).jpg

Baby girl dies after car crash that also killed mother and brother Credit: Facebook

திங்கட்கிழமை காலை 11:20 மணியளவில், Macarthur, Menangle Park பகுதியில் Hume நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில், 34 வயது பெண் மற்றும் அவரது இரண்டு வயது மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 3 மாத பெண் குழந்தை, Westmead குழந்தைகள் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி அக்குழந்தை இன்று காலை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Cement truckஉம் இக்குடும்பம் பயணம்செய்த வாகனமும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து சம்பவித்ததாக கூறப்படுகிறது.

குறித்த truckஐ ஓட்டியவருக்கு காயம் ஏற்படவில்லை எனவும், அவர் கட்டாய பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் NSW பொலிசார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் குழந்தைகள் காரினுள் எங்கு அமர்ந்திருந்தார்கள் என்பது குறித்து ஆராயப்படுவதாகவும், அதேநேரம் விபத்து தொடர்பான விசாரணைகளும் நடைபெற்றுவருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவித்தபோது அப்பகுதியில் இருந்தவர்களிடம் dash cam காட்சிகள் இருந்தால், அல்லது தகவல் ஏதேனும் தெரிந்தால் அவற்றை தமக்குத் தெரியப்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளனர்.

Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect  on1800 737 732,  and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at Beyond Blue.org.au and on 1300 22 4636. 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


2 min read

Published

Updated

Source: SBS


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now