SKIP TO MAIN CONTENT

நிதி நிலை அறிக்கை 2022: முதியோர் பராமரிப்புத் துறைக்கான சலுகைகள்!

ஆஸ்திரேலியாவின் 2022-23ம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Josh Frydenberg இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்கீழ் முதியோர் பராமரிப்புத் துறைக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கவுள்ளன என்ற விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Nurse pushing patient in wheelchair
Nurse pushing patient in wheelchair Source: AFP

1 min read

Published

Updated


Skip to article content

முதியோர் பராமரிப்புத்துறை மீதான Royal Commission விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பரிந்துரைகளையும் செயல்படுத்தும் முயற்சியில், 17.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள நிதி திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு அரசு அறிவித்திருந்தது.

இதற்கிணங்க இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் பின்வரும் திட்டங்களை அரசு அறிவித்தது.

  • முதியோர் பராமரிப்புத்துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிய திட்டமிடுபவர்களுக்கென 15,000 தொழிற்கல்வி மற்றும் பயிற்சி இடங்களுக்கென 49.5 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுகிறது.
  • முதியோர் பராமரிப்புத்துறை ஊழியர்களுக்கு சுமார் 800 டொலர்கள் வரையிலான ஊக்கத்தொகை இரு கட்டங்களாக வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 400 டொலர்களும் இரண்டாம் கட்டமாக 400 டொலர்களும் வழங்கப்படவுள்ளது.
  • அரசு மானியத்துடன் கூடிய home care மற்றும் residential aged care பணியாளர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ள அதேநேரம் இதற்கென 210 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுகிறது.
  • Pharmacy சேவையை residential aged care homes-உடன் இணைப்பதற்கென 340 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுகிறது.
  • தமது வீடுகளில் இருந்து கொண்டே முதியோர் பராமரிப்பைப் பெறுவதற்கான, home care packages திட்டம் ஊடாக 40,000 பேர் 2022-23இல் பயனடைவார்கள். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இத்திட்டம் ஊடாக மொத்தமாக 275,600 பேர் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் பயனடைவார்கள்.

இதேவேளை தமக்கான ஊதிய அதிகரிப்பு வழங்கப்படவேண்டுமென முதியோர் பராமரிப்புத்துறை ஊழியர்கள் தொடர்ச்சியாக குரல்கொடுத்துவருகிறபோதும் இதுபற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now