- 2022-23இல் கோவிட் கட்டுப்பாட்டுப் பணிகளுக்கென சுமார் 4.2 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுகிறது.
- புற்றுநோயைக் கண்டறிதல், மரபணுப் பரிசோதனை மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் நலத்திற்கு உதவுவது உள்ளிட்ட புதிய சேவைகள் medicare-இல் சேர்க்கப்படுகிறது.
- இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் telehealth சேவை medicare-இன் நிரந்தர அங்கமாக இணைக்கப்பட்டுள்ளது.
- விசேட தேவைக்குட்பட்ட சுமார் 5 லட்சத்திற்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு, NDIS திட்டமூடாக 2022-23 இல் 33.9 பில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளது.
- தேசிய மனநலம் மற்றும் தற்கொலை தடுப்புத் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கென, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அரை பில்லியன் டொலர்களை அரசு செலவிடுகிறது.
- இதன்படி lifeline சேவைக்கு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு 42.3 மில்லியன் டொலர்கள் மற்றும் headspace திட்டத்திற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 14.8 மில்லியன் டொலர்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள பல நிறுவனங்கள், சேவைகள் மற்றும் அரசு நிறுவனங்களிடையே இந்நிதி பங்கிடப்படவுள்ளது.
- Endometriosis என்ற நோய்நிலைமையுடன் வாழும் பெண்களுக்கென 58.1 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படுகிறது.
- அரிய வகை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான Trodelvy என்ற மருந்தை, Pharmaceutical benefits திட்டத்தில் (PBS) சேர்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மருந்து, PBS திட்டத்தில் சேர்க்கப்படுவதன் மூலம், ஒரு சிகிச்சைக்கு சராசரியாக 80,000 டொலர்களை நோயாளிகள் சேமிக்கமுடியும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share
