Highlights
- அரசின் புதிய நிதிநிலை அறிக்கையில் சிறுவர் பராமரிப்புக்கென 1.7பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளது.
- இந்த நிதி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானமீட்டும் குடும்பங்களை மையப்படுத்தியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சிறுவர் பராமரிப்புத் துறை தொடர்பில் ஏற்பட்டுள்ள கட்டண அதிகரிப்பு குறித்து அரசு கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அரசின் புதிய நிதிநிலை அறிக்கையில் சிறுவர் பராமரிப்பு- childcare package-க்கென 1.7பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் அதிகளவு பெற்றோரை முழுநேர வேலைக்கு திரும்பவைக்க முடியுமென அரசு எதிர்பார்க்கிறது.
சிறுவர் பராமரிப்புக்கான இந்த நிதி, குறைந்த மற்றும் நடுத்தர வருமானமீட்டும் குடும்பங்கள்- குறிப்பாக ஆண்டொன்றுக்கு 130,000 டொலர்கள் அல்லது அதற்கு குறைவான வருமானமீட்டும் குடும்பங்களை- மையப்படுத்தியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கருவூலக்காப்பாளர் Treasurer Josh Frydenberg குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் பராமரிப்பு வசதியைப் பயன்படுத்தும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளையுடைய குடும்பங்களுக்கான childcare subsidy -மானியங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக மகளிர் விவகாரங்களுக்கான அமைச்சர் Marise Payne தெரிவித்தார்.
குறிப்பாக ஐந்து வயதுக்கு குறைவான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையுடைய குடும்பங்களுக்கான childcare subsidy தற்போதுள்ள 85 வீதத்திருந்து 95 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.
எனினும் சிறுவர் பராமரிப்புத் துறை தொடர்பில் ஏற்பட்டுள்ள கட்டண அதிகரிப்பு குறித்து அரசு கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக எதிர்கட்சியான லேபர் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சிறுவர் பராமரிப்பு துறை தொடர்பான அரசின் கொள்கைகள் உருவாக்கிய சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் அரசு தவறிவிட்டதாக லேபர் கட்சித் தலைவர் Anthony Albanese கூறியுள்ளார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


