வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவுகள், ஊரடங்கு உத்தரவு, தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி பேணுதல் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் மற்றும் பிரதேசங்களில் செயல்படுத்தப் பட்டுள்ளன. உலக மக்களில் பாதிப் பேர் ஏதோ ஒருவகையான முடக்க நிலையை 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து அனுபவித்திருக்கிறார்கள். 90 க்கும் மேற்பட்ட நாடுகள் அல்லது பிரதேசங்களில் சுமார் 4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அவர்களது உள்ளூர் அல்லது நாட்டு அரசுகளால், வீட்டிலேயே இருக்கும்படி கேட்கப்பட்டனர் அல்லது உத்தரவிடப்பட்டனர்.
இதில் மிக அதிகமான முடக்கநிலை கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட நகரம் எது என்பதுதான் கேள்வி.

Health officials say seven of the COVID-19 cases have been linked to known outbreaks with the remainder under investigation. Source: AAP

Days in Lockdown - Global Source: SBS Tamil
நாடளாவிய தரவுகளைத் திரட்டினால், மிக அதிகமான முடக்க நிலை கட்டுப்பாடுகள் நம் நாட்டிலேயே நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தது..... இல்லை இன்னமும் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறது.
நம் நாட்டில் தான் அதிகப்படியான நாட்கள் முடக்க நிலையை எதிர்கொண்ட நகரம் இருக்கிறது என்பது தெரிந்தவர்களுக்கு அது எந்த நகரம் என்பதை ஊகிப்பதில் சிரமம் இருக்காது என்று நம்புகிறோம்.

Days in Lockdown - Australia Source: SBS Tamil

Days in Lockdown - Global: Cities and Regions Source: SBS Tamil
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.