கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி, நான்கு வயதான Cleo Smith, மேற்கு ஆஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்கரையில் உள்ள விடுமுறைத் தளம் ஒன்றிலிருந்து காணாமல் போன இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
நவம்பர் 3ம் திகதி, Carnarvon பகுதியில் உள்ள ஒரு பூட்டிய வீடொன்றில் அவர் உயிருடன், நலமாக இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தநிலையில், சிறுமியைக் கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட Terence Kelly என்பவருக்கு பதின்மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மேற்கு ஆஸ்திரேலிய நீதிமன்ற நீதிபதி Julie Wager தீர்ப்பளித்தார்.
37 வயதான Terence Kelly சிறுமியைக் கடத்திய குற்றச்சாட்டை கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டிருந்தார்.
Kelly, 11 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்த பிறகு பரோலில் விடுதலையாவதற்குத் தகுதி பெறுவார்.
சிறுமி Cleo Smith குடும்பத்தின் இரண்டு அறைகள் கொண்ட கூடாரம் இருந்த பகுதியில் திருடுவதற்கான பொருட்களை Kelly தேடித்திரிந்ததாகவும், அப்போது Cleoவும் சகோதரியும் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவர், Cleo-வை sleeping bagஉடன் தூக்கிச் சென்றிருந்ததாகவும் விசாரணைகளின்போது தெரியவந்திருந்தது.
மேலும் பொம்மைகள் மற்றும் "fantasy children" கொண்ட பேஸ்புக் பக்கங்களில் Kellyக்கு "குறிப்பிடத்தக்க ஆர்வம்" இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை கூடாரம் இருந்த தளத்திற்கு வருவதற்கு சற்று முன்பு உட்பட, போதைப்பொருளை பயன்படுத்தும் வழக்கம் இருந்ததை Kelly பொலிஸிடம் ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்தப்பின்னணியில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால், Kelly இக்குற்றத்தைச் செய்வதற்கு "மிகக் குறைவான வாய்ப்பு" இருந்திருக்கும் என்று நீதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
