SKIP TO MAIN CONTENT

சீனாவிலிருந்து குயின்ஸ்லாந்து வந்த கப்பலில் இருந்த 12 பேர் புகலிடக் கோரிக்கை!

சீனாவிலிருந்து Townsville துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் இருந்த 12 பேர் ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோருகின்றனர்.

 Polaris 3
Source: mosa danon/ MarineTraffic.com

2 min read

Published

Updated

By Renuka


Skip to article content

Highlights

  • சீனாவிலிருந்து Townsville துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் இருந்த 12 பேர் ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோருகின்றனர்.
  • இவர்களில் ஒருவர் கப்பலைவிட்டு வெளியே தப்பிச்சென்று பின்னர் பொலீஸில் சரணடைந்துள்ளார்.
  • குறித்த கப்பலிலிருந்த ஏனைய 37 பேர் குயின்ஸ்லாந்திலிருந்து ஜகார்த்தா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சீனாவிலிருந்து குயின்ஸ்லாந்து துறைமுகத்தை வந்தடைந்த கால்நடைகளை ஏற்றிச் செல்லும் கப்பலில் இருந்து குதித்து Townsville பிரதேசத்துக்குள் தப்பிச்சென்றதாக கூறப்படும் கப்பல் பணியாளர் ஒருவர், பொலீஸாரிடம் சரணடைந்து தனக்கு ஆஸ்திரேலிய அரசு தஞ்சமளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவருடன் கப்பலில் வந்த இன்னும் பதினொரு பேரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் பதினொரு பேரும் குறிப்பிட்ட கப்பலில் பணிபுரிந்த சிரிய நாட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை குயின்ஸ்லாந்து Townsville துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் துறைமுகத்திலிருந்து ஏப்ரல் 12 ஆம் திகதி புறப்பட்ட Polaris 3 கப்பல், 15 நாள் பயணத்தின் பின்னர் தனது வழக்கமான பாதையில் வந்து, கடந்த 27 ஆம் திகதி குயின்ஸ்லாந்து Townsville துறைமுகத்தை அடைந்திருக்கிறது.

அதிலிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த  ஒருவர் கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில், கப்பலுக்கு வெளியே பாய்ந்து, தப்பிச்சென்றுள்ளார்.

இந்த தகவல் Townsville பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, தப்பிச்சென்றவரை தேடி பாரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பலுக்கான கட்டுப்பாடுகளை மீறியது மாத்திரமல்லாமல், கோவிட் தனிமைப்படுத்தலை மீறியதால், பொலீஸார் கூடுதல் கவனத்தோடு தங்கள் நடவடிக்கையை மேற்கொண்டனர்.Townsville சமூகத்தின் பாதுகாப்புக்கான அறிவுப்புக்களையும் விடுத்திருந்தனர்.

இறுதியில் - இன்று திங்கட்கிழமை காலை - குறிப்பிட்ட பாகிஸ்தான் நபர் Townsville பொலீஸ் நிலையத்தில் வந்து சரணடைந்துள்ளார். தனக்கு ஆஸ்திரேலியா தஞ்சமளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அவருக்குரிய கோவிட் சோதனை எடுக்கப்பட்ட பின்னர், ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைப்பதற்கு Townsville பொலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பிட்ட நபருக்கு கோவிட் தொற்று இல்லையென சோதனை முடிவு வெளிவந்துள்ளது.

இதேவேளை, Polaris 3 கப்பலை சேர்ந்த மேலும் பதினொரு பேரும் ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரியுள்ளனர். இவர்கள் அனைவரும் Townsville பகுதியில் அமைந்துள்ள கோவிட் தனிமைப்படுத்தும் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த தகவல்களை பொலீஸார், ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த கப்பலிலிருந்த ஏனைய 37 பேர் குயின்ஸ்லாந்திலிருந்து ஜகார்த்தா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now