SKIP TO MAIN CONTENT

குயின்ஸ்லாந்து அருவியில் மூழ்கி இலங்கைப் பின்னணி கொண்ட தந்தையும் மகனும் பலி

வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள அருவியில் சிக்கி இலங்கைப் பின்னணிகொண்ட தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

image.jpg
Credit: Queensland.com, Facebook

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் Cairnsக்கு மேற்கில் உள்ள Redlynch Valleyஇல் நீந்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ள Crystal Cascadesஇல் ஒரு குழுவினருடன் நீந்திக்கொண்டிருந்தபோதே, இவர்கள் இருவரும் மரணமடைந்ததாக குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிங்களப் பின்னணிகொண்ட, 59 வயதுடைய சிசிரகுமரா கஜநாயக்க மற்றும் அவரது 21 வயது மகன் ஆகியோரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தந்தை நீருக்குள் சிக்கியதையடுத்து அவரை மீட்கும் முயற்சியில் மகன் ஈடுபட்டிருந்ததாகவும், இருப்பினும் இருவராலும் அங்கிருந்து வெளியேற முடியாதநிலை காணப்பட்டதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக அவசர சேவைப் பிரிவினரை அழைத்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர சேவைகள் பிரிவினர் இவர்களை நீரிலிருந்து மீட்டு முதலுதவி சிகிச்சையளித்த போதிலும், அவர்கள் மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் குயின்ஸ்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தநிலையிலேயே, இத்துயர சம்பவம் இடம்பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த இடத்தில் 2014 ஆம் ஆண்டில், Crystal Cascadesஇல் விழுந்த 18 வயது இளைஞன் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14.More information and support with mental health is available at Beyond Blue.org.au and on 1300 22 4636. 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now