SKIP TO MAIN CONTENT

ஐந்து மாநில மக்களுக்கு ஞாயிறு அதிகாலை காத்திருக்கும் "பரிசு"

ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் Daylight savings நேரமாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைமுறைக்கு வருகிறது.

Daylight savings is ending soon
Daylight savings is ending soon Source: AAP

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

எதிர்வரும் ஏப்ரல் 2 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைமுறைக்கு வருகின்ற Daylight savings நேரமாற்றத்தின் மூலம், பலர் வழக்கமாக உறங்கும் நேரத்துடன் ஒரு மணி நேரம் அதிகமான தூக்கத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

வருடத்தின் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நேரமாற்றம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதன்படி நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும் ACT பிராந்திய கடிகாரங்கள் 2 ஆம் திகதி அதிகாலை மூன்று மணிக்கு நேரமாற்றம் செய்யப்பட்டு, இரண்டு மணியாக பின் நகர்த்தப்படும். பெரும்பாலான smart devices தானாகவே நேரமாற்றத்தை பிரதிபலிக்கும்.

அடுத்த நேரமாற்றம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

குயின்ஸ்லாந்து, Northern Territory மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகியவை இந்நேரமாற்றத்தில் பங்கெடுப்பதில்லை.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now